வினுஷாவின் உடல் அமைப்பு குறித்து கேலி செய்த நிக்சன்.. சனம் ஷெட்டி கொடுத்த பதிலடி..இதுவும் கொடுமைதானே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 21 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சியில் நிக்சன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நிக்சன் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக பிரபலமடைந்த வினுஷா தேவியின் உடல் அமைப்பு குறித்து கிண்டல் செய்து இருக்கிறார்.

இது பற்றி பிக் பாஸ் முன்னாள் போட்டியாளராகவும், நடிகையாகவும் இருக்கும் சனம் செட்டி தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் நாளில் இருந்து சண்டைகளால் மட்டுமே பிரபலம் அடைந்து கொண்டிருக்கின்றனர். அடிக்கடி பிரச்சனைகளில் இந்த சீசனில் போட்டியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எப்போது யார் சண்டை போடுவார்கள் என்று யோசிக்க முடியாத வகையில் ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சர்மா வெளியேற்றப்பட்டார். இது ஒரு தரப்பினரிடம் ஆதரவை பெற்று வரும் நிலையில் நிகழ்ச்சிக்கு கண்டென்ட் கொடுத்து கொண்டு இருந்தவரை வெளியே போன பிறகு இனி நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்பது சிலருடைய கேள்வியாகவும் இருக்கிறது.

அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதுவரைக்கும் இந்த சீசனில் நிக்சன் அதிகமான பாசிட்டிவ் கருத்துக்களை ரசிகர்களிடம் பெற்றுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வினுஷா பற்றி இவர் பேசிய வார்த்தைகள் தற்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இவருக்குள் இப்படி ஒரு கேரக்டர் இருக்கிறதா என்றும் சில கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த வினுஷா ஒரு போட்டியாளராக இருக்கிறார். ஆனாலும் கடந்த வாரத்தில் இவர் திடீரென்று தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பிக் பாஸ் இடம் அழுது இருந்தார். அதற்கு காரணம் உள்ளே அவரிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவருடைய நிறத்தை காட்டி பலர் அவரை வேலை செய்வதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றெல்லாம் பலர் வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.
ஆனாலும் வினுஷா தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி தான் வெளியே போக வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிக்சன் சக போட்டியாளர்களிடம் பேசி கொண்டு இருக்கும் போது வினுஷா என்னுடைய டைப் கிடையாது. ஒரு பெண் என்றால் ஒரு சரியான உருவ அமைப்பு இருக்க வேண்டும். எது எது எவ்வளவு இருக்கணுமோ அவ்வளவு சரியாக இருக்க வேண்டும்.

அவருடைய மண்டை கொஞ்சம் சின்னதாக இருக்கிறது. மற்றபடி அவருடைய கண், உடை, அலங்காரம் எல்லாம் எனக்கு பிடிக்கும் என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை கண்டித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பிக் பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
அதில் நிக்சனிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை. உருவ கேலி மற்றும் பாகுபாடு கொண்ட மனநிலையின் உச்சம். இதனால்தான் வினுஷா இப்படி நடத்தப்படுகிறாரா? இது பற்றி கமல் சார் கவனிப்பார் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications