பிக் பாஸில் நிக்சன் செய்த தில்லு முல்லு வேலை.. குறும்படம் லீக் ஆனது.. கைவிட்ட பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட்டில் டிக்கெட் டூ பினாலேவில் இரண்டாவது முயல் டாஸ்க் நடைபெற்றது.
அதில் நிக்சன் மற்றும் விஜய் வர்மா இருவரும் சேர்ந்து டாஸ்கில் செய்த ஏமாற்று வேலை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினேஷ் விஷ்ணு குரூப்பை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக நிக்சன் டாஸ்க்கில் கொடுக்கப்பட்ட கார்டில் அடையாளம் வைத்து விளையாடி இருக்கிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து ஒவ்வொரு டாஸ்கிலும் விதிமீறல்கள் தான் நடந்து வருகிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்ற போது ரவீனா விதியை மீறி முழு டாஸ்க் முடிவடைவதற்கு முன்பே கையில் இருக்கும் மொத்த பணத்தையும் மணி இடம் கொடுத்து இருந்தார்.
அதுபோல மீதமுள்ள போட்டியாளர்களும் தங்களுக்குள் தாங்களே பேசிக்கொண்டு பணத்தை அவர்கள் இஷ்டத்திற்கு அடுத்தவர்களுக்கு கொடுத்து இருந்ததால் கடுப்பான பிக் பாஸ் அனைவரையும் எச்சரித்து மிரட்டி இருந்தார். அதற்குப் பிறகு நாங்கள் இனி சரியாக டாஸ்க் விளையாடுவோம் என்று உறுதிமொழி எடுத்திருந்த போட்டியாளர்கள் மீண்டும் மீண்டும் அதே தவறை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதுவும் நேற்று டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குகான இரண்டாவது டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் முயல் டாஸ்க் என்று பெயரை சொல்லி ஆமை வேகத்தில் டாஸ்கை கொண்டு போய் கொண்டு இருந்தனர். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த சீசனில் டாஸ்க்குள் ரொம்பவே படு மொக்கையாக இருக்கிறது என்பது பலருடைய வருத்தமாக இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் விறுவிறுப்பாக இருந்தால்தான் நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு ஏற்படும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் இந்த சீசனில் அதிகமாக பந்து போட்டு உருட்டும் டாஸ்க் தான் இருந்தது. இந்த நிலையில் முயல் டாஸ்க் என்றதும் இதுவாவது வேகமாக இருக்கும் என்று பார்த்தால் நேற்று நடந்தது ஆமையை விட மோசம் என்பது தெரிந்தது.
அதிலும் 24 மணி நேரம் எபிசோடில் இந்த டாஸ்க்கில் பல தில்லாலங்கடி வேலைகள் நடந்து இருப்பது அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் பிக் பாஸ் ஒரு மணி நேர எபிசோடில் இதை மேனேஜ் செய்து நிக்சன் மற்றும் விஜய் வர்மாவை காப்பாற்றி இருக்கின்றனர். ஆனாலும் ரசிகர்கள் பிக் பாஸின் ரகசியங்களை அம்பலப்படுத்தி இருக்கின்றனர்.
அதாவது நேற்று நடந்த டாஸ்க்கில் ஒரு கார்டு கொடுக்கப்பட்டிருக்கும் அதை ஏற்கனவே டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த விஜய் வர்மா எல்லோரிடமும் கொடுக்க அப்போது எவிக்ஷன் என்கிற கார்டில் மட்டும் அடையாளம் வைத்துக்கொண்டு அதையே இரண்டு முறை சரியாக எடுத்து இருக்கிறார். அது குறித்து ஏற்கனவே அர்ச்சனா பிக் பாஸ் இடம் மைக்கில் அறிவித்திருக்கிறார்.
எவிக்ஷன் என்கிற கார்டில் நெயில் பாலிஷ் வைத்த மூன்று புள்ளிகள் இருக்கிறது என்று சொன்ன பிறகும் பிக் பாஸ் அதை கண்டுகொள்ளவில்லை. டாஸ்க்கில் பலர் வெளியேற்றப்பட்ட பிறகு தான் அந்த கார்ட் எடுத்து வெளியே வையுங்கள் என்று சொல்லி இருந்தாராம். அதை 24 மணி நேரத்தில் எபிசோடில் பார்த்த பல ரசிகர்கள் இதே குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

தற்போது அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் இந்த வாரம் குறும்படம் போட்டு நிக்சன் மற்றும் விஜய் வர்மாவை கிழித்தெடுக்க போகிறாரா? அல்லது வழக்கம்போல இவர்கள் இருவருடைய தப்பையும் பூசி மெழுக போகிறாரா என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இந்த விஷயத்தில் நிக்சன் மற்றும் விஜய் வர்மா நடந்து கொண்ட விதம் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க என்ற கருத்தை தெரிவியுங்கள்.












Click it and Unblock the Notifications