பிக் பாஸ் 7: வெளிய வாங்க பாத்துக்கலாம்.. தினேஷிடம் மல்லுக்கு நிற்கும் நிக்சன்.. எல்லை மீறிய பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன், தினேஷ் இடம் நீங்க பிக்பாஸை விட்டு வெளியே வாங்க பார்த்துக்கலாம் என்று மிரட்டல் தோனியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் நிக்சன், அர்ச்சனாவிடம் கடுமையாக பேசிக் கொண்டிருக்கும்போது தட்டி கேட்ட தினேஷிடம் கடுமையாக பேசி இருக்கிறார்.

அதே நேரத்தில் தினேஷ் நிக்சனின் பேச்சுக்கு எதிர்ப்பார்க்காத பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Bigg Boss Tamil Season 7 Nixon threatening Dinesh

அந்த வகையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று முன்தினம் நடந்த கல்லூரி டாஸ்க் பற்றி விஷ்ணு மற்றும் நிக்சன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விஷ்ணு வினுஷாவை பற்றி பேச அதற்கு அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா நீ கேட்கிற கேள்வி சரிதான் என்று சொல்கிறது போல கைதட்ட, அதனால் கோபமான நிக்சன் அர்ச்சனாவிடம் மல்லு கட்டி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்ற ஒரு கட்டத்தில் கடும் கோபத்தில் நிக்சன் ச்சீ...போடி, நாயே, கருமம், த்தூ என்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி அர்ச்சனாவை திட்டிக்கொண்டு இனி யாராவது வினுஷா என்ற பெயரை எடுத்தால் சொருகிடுவேன் என்று மிரட்டவும் செய்திருந்தார். அதனால் அங்கே இருந்த தினேஷ் நிக்சனிடம் அது என்ன நீ இப்படி சொல்லலாமா சொருகிறுவேன் என்று சொல்றதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்க, அதற்கு நிக்சன் நான் உங்ககிட்ட பேசல என்று சொல்லி கொஞ்சம் அமைதியாக இருந்தார்.

சிறிது நேரத்தில் பிறகு தினேஷ், கூல் சுரேஷ், விஷ்ணு, ரவீனா மணி போன்றோர் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் அர்ச்சனா வந்து அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது இதை பார்த்த நிக்சனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. அப்போது இந்த வீட்டுக்குள் A கேங் மட்டுமல்ல, B கேங் இங்கே இருக்கிறது என்று நிக்சன் பேசிக் கொண்டிருந்தார்.

அதோடு கும்பலாக என்னை கஷ்ட்ட படுத்தி நான் கஷ்டப்படுவதை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நிக்சன் கத்தினார். அதற்கு தினேஷ் இங்கே யாரும் உன்னை பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை, நாங்க இங்க வேற கதை பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்ல அதற்கு கோபமான நிக்சன் நான் உங்ககிட்ட ஒன்னும் பேசல என்று மீண்டும் சொல்கிறார்.

இதற்கு தினேஷ் நீ எங்களை குறிப்பிட்டு சொல்லி தானே அவங்க சிரிக்கிறாங்க என்று சொல்கிற அதற்கு நான் பதில் சொல்லனுமே என்று சொல்ல அதற்கு நீங்க இங்க பதில் ஒன்னும் சொல்ல வேண்டாம். பிக் பாஸ்க்கு பிறகு வெளியில வாங்க தெரியும் யார் எப்படின்னு. மூணு அல்லது அஞ்சு வருஷத்துக்கு பிறகு யாரு இருக்காங்கன்னு தெரியும் என்று சொல்ல, அதனால் கோபமான தினேஷ் நானும் உன் வயசில் எப்படி இருந்தேன் என்று அது எனக்கு தெரியும் என்று சொல்கிறார்.

Bigg Boss Tamil Season 7 Nixon threatening Dinesh

அப்போது நிக்சன் பேசிய வார்த்தையால் கோபமடைந்த மணி நிக்சனிடம் நீ என்ன பேசுற? வெளியே வந்தால் மூன்று வருஷம் அல்லது அஞ்சு வருஷத்தில் தினேஷ் இருக்க மாட்டார் என்று சொல்றியா? என்று கேட்க நிக்சன் நான் அப்படி சொல்லவில்லை. அந்த மூன்று அல்லது ஐந்து வருடத்தில் யார் எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்று தெரியும் என்று தான் நான் சொன்னேன் என்று சொல்ல,

அதற்கு தினேஷ் நீ வெளியே போய் நல்லா இருந்தா எனக்கு சந்தோசம் தான். நான் பொறாமைப்படுற ஆளும் கிடையாது. யாருக்கும் நல்லது நடக்க கூடாதுன்னு தட்டிப் பறிக்கிற ஆளும் கிடையாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+