தினேஷை அவமானப்படுத்திய பூர்ணிமா.. போட்டியாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்.. பிக் பாஸ் வைத்த செக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 16ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் உன்னை போல் ஒருவர் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்களுடைய பங்களிப்பு அதிகமாக இருக்கிறதா? இல்ல பெண்களுடைய பங்களிப்பு அதிகமாக இருக்கிறதா? என்ற வாக்குவாதம் எழுகிறது.

அப்போது தினேஷை போலவே வேஷமிட்டிருக்கும் பூர்ணிமா தினேஷ் பற்றி கடுமையாக விமர்சித்து பேசுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்ட பிறகு பெரிய அளவில் எந்த சுவாரசியமான சண்டைகளும் இல்லாமல் இருந்த நிலையில் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் உன்னை போல் ஒருவன் டாஸ்க் வைத்திருக்கின்றார்.
அதில் ஆண்கள் பெண் போட்டியாளர்களை போலவும், பெண்கள் ஆண் போட்டியாளர்கள் போலவும் மாறி வேஷம் இட்டிருக்கின்றனர். தாங்கள் வேஷம் போட்டு இருக்கும் இன்னொரு நபரின் குணாதிசயங்கள் நடவடிக்கைகள் போன்றவற்றை பிரதிபலித்து வேஷம் போட்டு இருக்கும் நபருடைய கேரக்டரை சரியாக காட்ட வேண்டும் என்று கூறி இருக்கின்றனர்.
அந்த இந்த நிலையில் நேற்று விசித்ராவின் கேரக்டரை சரியாக நடித்ததாக நிச்சனுக்கு கோல்டன் ஸ்டார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் நேற்று பிக் பாஸ், போட்டியாளர்களிடம் வீட்டிற்குள் ஏழு ஆண்களும் ஆறு பெண்களும் இருக்கின்றனர். அதில் ஆறு ஆண்களுக்கு மட்டும்தான் பெண் போட்டியாளர்களின் விஷம் போட முடியும். அதனால் பெண்கள் போல நடிக்க முடியாது என்று ஒரு ஆண் போட்டியாளரை பெண்கள் எல்லோரும் சேர்ந்து தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும் என்று பிக் பாஸ் கூறியிருந்தனர்.
அதன்படி தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதனால் தினேஷுக்கு பிக் பாஸ் சீக்ரெட் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி யாரு கொடுக்கப்பட்ட கேரக்டரில் இருந்து விலகாமல் இருக்கிறார்களோ அவர்களை நீங்கள் குழப்பம் செய்து அவர்கள் நடித்துக் கொண்டிருக்கும் கேரக்டரில் இருந்து நிஜ கேரக்டரை கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார். அதுபடி கானா பாலா மற்றும் விஷ்ணுவை சீண்டி பார்த்து அவர்களுடைய நிஜ கேரக்டரை தினேஷ் கொண்டு வந்திருந்தார்.
இப்படியாக இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீண்டும் இன்று உன்னைப் போல் ஒருவன் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் எந்த வீட்டில் ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறதா? அல்லது பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறதா? என்ற ஒரு விவாதம் நடைபெறுகிறது.
அப்போது விசித்ராவாக நடிக்கும் நிக்சன் ஒண்ணுமே பண்ணல என்று சொல்ல, அப்போது மணியகாக நடிக்கும் ரவீனா மேடம் நீங்க வாயிலேயே வடை சுடறீங்க மேடம் என்று கூறுகிறார். அதற்கு விசித்திராவாக நடிக்கும் நிக்சன் மணி நீ இரு என்று சொல்கிறார்.
அதற்கு ரவீனா நீங்க ஒரு லேடீஸா இருந்து கிச்சன்ல என்னத்த கிழிச்சு இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறார். அதைத்தொடர்ந்து அக்ஷயாவாக தினேஷ் வேடமிட்டு இருக்கும் நிலையில் இவங்க எல்லாருமே கண்டண்டாக கிரியேட் பண்றேன் என்று ஏதோ பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது தினேஷ் வேடமிட்டு இருக்கும் பூர்ணிமா கேப்டனா நான் என்ன பண்ணுனேன்னு நீங்க நினைக்கிறீங்க? நான் ஒண்ணுமே பண்ணல, என்று பேசிக் கொண்டிருக்கும்போது சோலோ பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் யாரு என்று பூர்ணிமா பேசிக் கொண்டிருக்கும்போது அதற்கு எதிர்பாராத விதமாக ரவீனா வேடமிட்டு இருக்கும் விக்ரம், விக்ரம் என்று கூறுகிறார்.
ஏற்கனவே விக்ரம் நான் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று கூறியதால் அது குறித்து மீம்ஸ்கள் கிளம்பி வருகிறது. இரவு நேரத்தில் விக்ரம் கேமரா முன்பு நான் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று கூறியதை வைத்து இப்போதும் பலர் கிண்டல் செய்து வரும் நிலையில் இந்த ப்ரோமோவிலும் காமெடி செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications