விஸ்வரூபமான ஐசு பிரச்சனை.. நிக்சனை பார்த்து அர்ச்சனா சொன்ன வார்த்தை.. பிக் பாஸ் வைத்த செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 17ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஐசு வெளியே சென்றதற்கு முக்கிய காரணம் நிக்சன் தான் என்று அர்ச்சனா கூறி இருந்த நிலையில் நிக்சன் அர்ச்சனா மற்றும் விசித்ராவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

bigg boss tamil season 7 November 17th Promo 1 and fans reaction

அப்போது நீ எலிமினேஷன் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்ற பிறகு உனக்கே எல்லாம் புரியும் என்று அர்ச்சனா நிக்சனுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் காதல் கண்டன்ட் தவறாமல் இடம் பிடித்து விடுகிறது. இதில் ஒரு சிலர் தானாக காதலிக்கிறார்களா? அல்லது கண்டன்டுக்காக இப்படி நடித்துக் கொண்டிருக்கிறார்களா? என்று ரசிகர்களுக்கு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் பறவைகளாக சிலர் வளம் வந்தாலும் வெளியே வந்து ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து போய் விடுகின்றனர்.

அந்த மாதிரி தான் இந்த ஏழாவது சீசனிலும் சிலர் நடந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் நிக்சன் மற்றும் ஐசு இருவரும் நடந்து கொள்ளும் விதம் பற்றி பலரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் ஐசு இருந்த வரைக்கும் நிக்சன் அவரோடு ஒன்றாகவே சுற்றிக்கொண்டு ஐசுக்கு கால் அமுக்கி, கையை அமுக்கி விட்டு, ஐசுவின் உதடு கண்களை வர்ணித்துக் கொண்டு நிக்சன் சுற்றிக் கொண்டிருந்ததை பலரும் விமர்சித்து வந்தனர்.

ஆரம்பத்தில் நிக்சனுக்கு தனியாகவும் ஐசுக்கு தனியாகவும் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து பழகி வருவதை பார்த்த பிறகு அதிகமானோர் இவர்களை திட்டி தான் கமெண்ட் போட்டுக் கொண்டிருந்தனர். இப்படியாக இருக்கும் நிலையில் கடந்த வாரத்தில் ஐசு குறைவான வாக்குகளை பெற்றிருந்தார்.

இதனால் ஐசு கடந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டு இருந்தார். இதன் காரணமாக இந்த வாரம் முழுக்கவே நிக்சன் டல்லாக காணப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஐஸ் உடைய பிரச்சினை பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பித்திருக்கிறது. அதாவது தற்போது வெளியாகியிருக்கும் முதல் ப்ரோமோவில், நிக்சன் நானும் ஐசுவும் பேசுறது தப்புன்னா மணி ரவீனா பேசுறது தப்பு, விஷ்ணு பூர்ணிமா பேசுறதும் தப்பு என்று நிக்சன் விசித்திராவிடம் கூறுகிறார்.

bigg boss tamil season 7 November 17th Promo 1 and fans reaction

அப்போது விசித்ரா மரியாதை தருமாறு கூற அதற்கு மிக்சன் நீங்கள் ரெஸ்பெக்ட் கொடுங்க நானும் ரெஸ்பெக்ட் கொடுக்கிறேன் நீங்க யாரா வேணாலும் இருந்துட்டு போங்க என்று சொல்லிவிட்டு, அர்ச்சனா கெட்டு போறதுக்கு காரணமே நீங்கதான் என்று கோபமாக கூறுகிறார் . அதை கேட்ட அர்ச்சனா, நான் என்ன கெட்டுப் போயிட்டேன்னு நீங்க பார்த்தீங்களா? என்று கேட்க, அதற்கு நிக்சன் நான் உங்களிடம் பேசவே இல்லை என்று கூற, இதற்கு மீண்டும் அர்ச்சனா என் பேரை எடுத்தது நீங்கதான் என்று சொல்கிறார்.

இதற்கு நிக்சன் இல்லை இல்லை என்னால ஐசு வெளியே போயிட்டான்னு சொன்னாங்க என்று சொல்ல, இதற்கு அர்ச்சனா, 40 நாளில் ஐசு எதுவுமே பண்ணாம இருந்ததுக்கு காரணம் நிக்சன் கூட இருந்தது தானே? எல்லாரும் ஒரு நாள் எலிமினேட் ஆகி போவாங்க தானே என்று கேட்கிறார். அதற்கு நிக்சன் கண்டிப்பா போவாங்க என்று சொல்கிறார்.

இதைக் கேட்டதும் அர்ச்சனா அப்பனா வெளியே போய் பார்த்துக்கோங்க என்று பதில் கொடுக்க, நிக்சன் சரி வெளியே போய் பார்த்துகிறேன் என்று கூறுகிறார். இப்படியாக தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் அதிகமானோர் அர்ச்சனாவுக்கு ஆதரவாக கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+