பிக் பாஸ் 7: பழைய போட்டியாளர்களின் கொட்டத்தை அடக்கிய வைல்ட் கார்ட் என்ட்ரிஸ்.. மிரள வைத்த சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் நவம்பர் ஒன்றாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் பிக் பாஸ் டேலண்ட் ஷோ இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. நேற்று எபிசோடு சண்டை சச்சரவுகளோடு இருந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக மாறி இருக்கிறது.
அதே நேரத்தில் இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பழைய போட்டியாளர்கள் ஆட்டம் போட்டு புதியதாக வந்த வைல்ட் கார்ட் என்ட்ரிகளை பாடாய்ப்படுத்தி இருந்த நிலையில் இன்று அவர்களுக்கு தரமான சம்பவம் இருக்கிறது.அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினமும் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தன்னைப் பற்றி தவறாக பேசி விட்டார் என்று பிரதீப் கூல் சுரேஷ் பற்றி கெட்ட வார்த்தைகளில் திட்டி இருந்தார். அந்த வார்த்தை வெளியே பீப் சவுண்டோடு வந்திருந்த நிலையில் அது குறித்து பெரும் விவாதம் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஆரம்பத்தில் இருந்து பிரதீப்புக்கு ஆதரவு கொடுத்து வந்த பல ரசிகர்கள் கூட இப்போது அவரை கழுவி ஊற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இதுவரைக்கும் ஸ்மால் பாஸ் வீட்டில் புதியதாக வந்த வைல்ட் கார்ட் போட்டியாளர்களை அனுப்பி வைத்துவிட்டு அவர்களை இந்த வாரம் எலிமினேஷனில் வெளியே விரட்டி விட வேண்டும் என்று பிளான் போட்டு அதுபடியே நடந்து வரும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று பிக் பாஸ் சரியான ஆப்பு கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய தினம் நடக்க உள்ள நிகழ்வுகளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஹவுஸ்மெட்டை குஷிப்படுத்துவதற்காக பிபி டேலண்ட் ஷோ நடத்தப்பட இருக்கிறது. இதில் நடுவராக ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இருப்பவர்கள் தேர்வாகி இருக்கின்றனர். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் தங்களுடைய நடன திறமையையும், நடிப்பு திறமையும், தனித்தனிவாகவும் குழுவாகவும் சேர்ந்து மேடையில் செய்து காட்டி இருக்கின்றனர்.
இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சீசனில் யாருக்கு சப்போர்ட் பண்றதுனே தெரியல. எல்லோரும் அந்நியன் மாதிரி மாறிக்கிட்டே இருக்காங்க என்று சிலர் தங்களுடைய வருத்தங்களை பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் இன்னும் ஒரு சிலர் தவறு செய்பவர் யாராக இருந்தாலும் தவறு தவறுதான். பிரதிப்புக்கு தான் எது செய்தாலும் சரி என்ற தலைகணத்தில் இருக்கிறார். அவருக்கு இந்த வாரம் கண்டிப்பாக ஆண்டவர் அட்வைஸ் கொடுத்ததோடு நிற்காமல் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பல ர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications