பிக் பாஸில் இருந்து வெளியேறும் 3 போட்டியாளர்கள்.. இதுவரைக்கும் நடக்காத செயல்.. பிக் பாஸ் வைத்த செக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் நவம்பர் 20ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று மூன்று போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் மேலும் வைல்ட் கார்டு என்ட்ரியாக வரப்போகிறார்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உடன் பழைய போட்டியாளர்கள் மோதும் நிலையில் பழைய போட்டியாளர்கள் தோற்றால் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி ஏழாவது வாரத்தை கடந்திருக்கிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் அதைத்தொடர்ந்து 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்திருந்தனர். அதில் எட்டு போட்டியாளர்கள் வெளியேறி இருந்த நிலையில் நேற்று கானா பாலாவும் வெளியேறி இருக்கிறார்.
இப்படியாக இருக்கும் நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களையும் ஹாலில் உட்கார வைத்து அவர்களிடம் நான் எதற்காக உங்களை கூப்பிட்டு இருக்கிறேன் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா என்று கேட்க அதற்கு சரவணன் இல்ல பிக் பாஸ் நீங்களே சொல்லிருங்க என்று சொல்கிறார்.
அப்போது உள்ளே இருக்கும் 14 போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் சவால் விடுகிறார். இனி 3 வைல்ட் கார்ட் போட்டியாளர்களால் பிக் பாஸ் வீடு ஆட்டம் காண போகிறது. அதிரடியாக இனி மூன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வரப்போகிறார்கள். அப்போது ஒரு டாஸ்க் கொடுக்கப் போகிறது. இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது இருக்கும் போட்டியாளர்கள் வென்றால் பிக் பாஸில் தொடரலாம்.
அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் தோற்றால் புதியதாக வரும் வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு வழிவிட்டு வெளியேற வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் மூன்று போட்டியாளர்கள் வெளியேறுவார்களா? அல்லது மூன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வருவார்களா என்று குழப்பம் கொடுக்கும் வகையில் பிக் பாஸ் ப்ரோமோ வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது இந்த எதிர்பாராத ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் அந்த மூன்று போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதே நேரத்தில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் டாஸ்க்கில் தோற்று விட்டால் வெளியேற வேண்டும் என்று கூறி இருப்பதால் இந்த வாரம் அப்போது மூன்று எலிமினேஷன் இருக்கப் போகிறதா? அது யாராக இருக்கும் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications