பிக் பாஸூக்குள் பூகம்பம்.. தொடங்கியது முதல் டாஸ்க்.. தோற்ற முக்கிய நபர்.. வெளியேறுகிறவர் இவரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 21 ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு முதல் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதில் தோற்றவர்கள் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஏற்கனவே எலிமினேஷனில் வெளியே சென்ற மூன்று போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வருவதை நினைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் கதி கலங்கி இருக்கின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது தான் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் அதிகமான சண்டை சச்சரவுகளோடு கண்டன் கொடுக்கிறேன் என்கிற பெயரில் சில போட்டியாளர்கள் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது பிக் பாஸ் அடுத்தடுத்த டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களுக்குள் பிரச்சனையை மட்டுமல்லாமல் நிகழ்ச்சியிலும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
ஏற்கனவே சில வாரங்களாக கமல்ஹாசன் நிக்சன் மற்றும் மாயா குரூப்க்கு எதிராக அவர்கள் செய்ததை குறித்து சரியாக கேள்வி கேட்கவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி இருந்த நிலையில் இப்போது ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே சென்ற மூன்று முக்கிய போட்டியாளர்கள் மீண்டும் இந்த வாரம் வீட்டிற்குள் வர இருக்கிறார்கள் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.
அதே நேரத்தில் உள்ளே நடக்கும் டாஸ்க்களில் தோற்கும் போட்டியாளர்கள் இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கு வழிவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் ஏற்கனவே எலிமினேஷன் ஆகி வெளியே சென்றவர்கள் மீண்டும் உள்ளே வந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கின்றனர்.
இப்படியாக இருக்கும் நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் முதல் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு கம்பங்கள் இருக்கின்றன. அதில் ஆறு டிராக் இருக்கிறது. அந்த டிராக்குகளில் ஒரு பந்தை வைத்து மேலும் கீழும் டிராக்கை ஆட்டி கீழே இருக்கும் பாஸ்கெட்டுக்குள் அந்த பால் விழுகிற மாதிரி செய்ய வேண்டும்.
இதில் ஜெயிக்கிறவர்கள் இந்த வாரம் சேவ் ஆகப்படுவார்கள் என கூறப்பட்டிருக்கிறது. கடுமையான டாஸ்க்களுக்கு போட்டியாளர்கள் தயாராகி இருக்கின்றனர். இதில் ஹவுஸ் மேட் வென்றார்களா? அல்லது தோற்றார்களா? என்று கேள்வியோடு ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த ப்ரோமோவில் வெளிவந்த காட்சிகளில் தினேஷ் மட்டும் தான் அவருக்கான டாஸ்கை சரியாக முடித்தது போன்று தெரிகிறது.
அதே நேரத்தில் அர்ச்சனா, விஷ்ணு, சரவணன் முதலியனோர் அந்த டாஸ்க்களை சரியாக செய்யாமல் சொதப்பி விடுகின்றனர். அதை பார்த்து வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் தலையில் கை வைத்து அதிர்ச்சியை வெளிகாட்டுகின்றனர். இதனால் இவர்கள் இந்த வாரம் வெளியேறுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை அடுத்த ப்ரோமோவில் பார்க்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications