போட்டியாளர்களை கூட்டு சேர்த்து பிரதீப் போட்ட பிளான்.. மொக்கை கொடுத்து தண்டனை கொடுத்த பிக் பாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் மூன்றாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் பிக் பாஸ் வைத்த டாஸ்க்கில் விஷ்ணு ஜெயித்திருக்கிறார். அதனால் அக்ஷயா ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார்.

bigg boss tamil season 7 November 3rd Promo 1 and fans reaction

அதே நேரத்தில் இத்தனை நாட்களாக தான் சொன்னது சரி என்று ஆடிக்கொண்டிருந்த பிரதீப் இன்று சக போட்டியாளர்களை கூட்டு சேர்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து கன்டென்ட் கொடுக்கிறோம் என்கின்ற பெயரில் பல போட்டியாளர்கள் கெட்ட வார்த்தையில் பேசி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் யார் சரி யார் தவறு என்று யோசிக்க முடியாத வகையில் தான் அனைத்து போட்டியாளர்களும் இருந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரதீப் ஒரு சில நாட்களாகவே தன்னுடைய வார்த்தைகளால் ரசிகர்களின் மத்தியில் தனக்கு இருந்த மதிப்பை குறைத்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் டாஸ்க் பற்றியும் பிக் பாஸ் விதிமுறைகள் பற்றியும் நன்றாக புரிந்து கொண்டு அனைத்து போட்டியாளர்களுக்கும் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் பிரதீப் நேற்றைய முன் தினம் கூல் சுரேஷின் அம்மாவை பற்றி தவறாக பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.

அதோடு கூல் சுரேஷிடம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று திமிராக பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த வாரம் கமல்ஹாசன் பிரதீப்புக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே விஜய் வர்மா பிரதீப் உடைய அம்மா அப்பாவின் இறப்பு பற்றி கிண்டல் பண்ணி சிரித்ததால் தான் அவர் வெளியேற்றப்பட்டார் என்று கமல் மறைமுகமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனது தாய் மீது சத்தியம் செய்த கூல் சுரேஷின் அம்மாவை பற்றி பிரதீப் பேசியதாக கூல் சுரேஷ் கோபத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு பிரதீப் பேசியது தவறு என்று அனைத்து போட்டியாளர்கள் எடுத்து சொன்னாலும் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பிரதீப் பிடிவாதமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பிரதீப் நீங்க எல்லாரும் நான் தப்பு பண்ணலன்னு நினைக்கிறீங்கன்னு நினைச்சுகிட்டு இருக்கேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய பேச்சைக் கேட்டு போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதமாகவே பிரதீப் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இப்போது இவர் பாபநாசம் திரைப்படத்தில் சுயம்பு எல்லாரையும் எப்படி நான் சொன்னது சரி என்று நம்ப வைப்பாரோ அது போலவே இப்போது இவரும் நடந்து கொண்டிருக்கிறார் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

அதே நேரத்தில் இந்தப் ப்ரோமோவில் டேக் டைவர்ஸ்சன் என்ற ஒரு டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் பஸில்ஸ் வைக்கப்பட்டிருக்கும் மூன்று டேபிள்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஸ்டார்ட் முதல் எண்ட் வரை கொண்டு போறது தான் டாஸ்க். டாஸ்க் முடிந்து விட்டால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர் ஜெயிலுக்கு அனுப்பலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதில் விஷ்ணு டாஸ்க்கை முடித்து விடுகிறார். அதைத் தொடர்ந்து கூல் சுரேஷ், சார் எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க சார் நான் மூணு டேபிளையும் முடித்து விடுவேன் என்று கூறுகிறார். அதை தொடர்ந்து அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் அவர் சரியாக முடிக்காததால் நீங்கள் லேட் ஆகிட்டீங்க என்று கூறுகிறார். அடுத்ததாக பிக் பாஸ் வீட்டினர் அனைவரும் சேர்ந்து அட்சயாவை ஜெயிலுக்கு அனுப்புகின்றனர்.

இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கும் நிலையில் நாளை கமல் சார் எபிசோடில் பிரதீப்புக்கு பஞ்சாயத்து இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட பிரதீப் இன்று சக போட்டியாளர்களிடம் தான் செய்தது சரி என்று நிரூபிக்கும் வகையாக அனைவருடைய மண்டையை கழுவிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம். அதே நேரத்தில் இப்போ வரைக்கும் வாக்குகளில் அடிப்படையில் அன் அபிஷியலாக ஐசு கடைசி இடத்தில் இருக்கிறார். இதனால் இவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+