பிரதீப்பை தொடர்ந்து நிக்சன் பிரச்சனையை கையில் எடுத்த பிக் பாஸ்.. அடுத்த ரெட் கார்ட் இவருக்கா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் எட்டாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் குறித்து செய்த கமெண்டுக்கு விளக்கம் அளிக்க சொல்லி பிக் பாஸ் புது டாஸ்க் வைத்திருக்கிறார்.

அதில் வினிஷாவை பற்றி நிக்சன் சொன்ன கமெண்ட் திரையில் வர அதற்கு நிக்சன் தான் இப்படி எல்லாம் சொல்லவில்லை என்று வாதிட்டு பிறகு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பல சுவாரஸ்யமான நிகழ்வுகளோடு இப்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் மாயா தன்னோடு பூர்ணிமா உட்பட சில போட்டியாளர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு ஆடிய ஆட்டம் ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் மாயா குரூப்பிற்கு அதிரடி கொடுத்து ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா மூன்று பேரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு மாயா குரூப்பை கதற விட்டுக் கொண்டிருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் பிக் பாஸும் எப்போது அவருடைய பங்குக்கு இவர்களுக்கு டாஸ்க் என்கிற பெயரில் ஆப்பு வைக்க தொடங்கி இருக்கிறார்.

கடந்த வாரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். அதோடு வழக்கம் போல இப்போது மாயா பேச்சை கேட்டு பூர்ணிமா ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு துணையாக ஜோவிகா, ஐசு, நிக்சன் போன்றோரும் உடன் இருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் சேர்ந்து போன வாரத்தில் பிரதீப்பை தூக்கியது போல இந்த வாரம் விசித்திரா, அர்ச்சனா, தினேஷ் மூன்று பேரையும் தூக்கி விட வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதில் மாயா விசித்ரா, அர்ச்சனா, தினேஷுக்கு எதிராக இதற்கு நானே இந்த முறை உரிமை குரல் தூக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படியாக இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையாக பிக் பாஸில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரவீனா டாஸ்க் லெட்டரை படிக்கிறார். அப்போது ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் சேர்ந்து அமர்ந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ரவீனா அந்த டாஸ்க் லெட்டரை படிக்கிறார். அதில் இந்த வீட்டில் பல்வேறு ஸ்டேட்மெண்ட் காட்டப்படும். அதை சொன்ன நபர் நான் ஏன் அதை சொன்னார்கள் என்பதை விளக்க வேண்டும் என்று படிக்கிறார். அதில் அனைவரும் ஒவ்வொருவராக வந்து தங்களுடைய ஸ்டேட்மெண்டுகளை கூறுகிறார். அப்போது நிக்சன் வினுஷாவை பற்றி உருவ கேலி செய்திருப்பதும் அனைவருக்கும் தெரிய வருகிறது.
அதற்கு நிக்சன் நான் தப்பான அர்த்தத்தில் எதுவும் சொல்லல, நான் இந்த வீட்டில் இதை சொல்லல என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அர்ச்சனா நிக்சனை நக்கலாக பார்க்கிறார். அதனால் கடுப்பான நிக்சன் உன் மூஞ்செல்லாம் அப்படி வச்சுக்கிட்டு இருக்காத, பார்த்தாலே செம கடுப்பாகுது என்று எச்சரிக்கிறார். அதைத் தொடர்ந்து சத்தியமா நான் தப்பான மீனிங்கில் பண்ணல. அப்படி நினைச்சிருந்தா நான் சாரி என்று நிக்சன் கூறுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications