தலைவராக இருக்கும் சரவணனுக்கு அடுத்தடுத்து பிரச்சனை.. ஒருமையில் திட்டிய ஜோவிகா.. லீக்கான வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டாவது வார தலைவராக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் நடிகர் ஆன சரவணன் தேர்வாகி இருக்கிறார்.
இந்த நிலையில் சக போட்டியாளர்கள் சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா சரவணனை மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைக்கிறார்.
அதே நேரத்தில் இந்த சீசனில் முட்டை மற்றும் பிரட்க்காக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.

அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு படியே பிரம்மாண்டமாக பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் ஆரம்பத்திலேயே 18 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருந்தனர். அதில் முதல் வாரத்தில் நடிகை அனன்யா எலிமினேஷன் காரணமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து நேற்று பவா செல்லத்துரை தன்னால் இனி தொடர முடியாது என்று கூறி தனக்கு உடல்நல பிரச்சனையும், மனப்பிரச்சனையும் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறி திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரம் அடிப்படை கல்வி முக்கியம் என்று விசித்திரா கூற, தனக்கு படிப்பு வரவில்லை அதனால் தான் நான் படிக்கவில்லை என்று ஜோவிகா சொல்ல இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
அப்போது ஜோவிகா விசித்திராவை ஒருமையில் பேசினார் என்று ரசிகர்கள் கருத்து கூறி ஜோவிகாவிற்கு அறிவுரை கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு வனிதா தன்னுடைய மகள் ஜோவிகா விசித்திராவை பேசவில்லை நாங்கள் அப்படி வளர்க்கவும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இன்று என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது மொத்த முட்டையையும் உடைச்சு போட்டு கலக்கிட்டா எப்படி ஆப்பாயில் வரும் என்று வினுஷா கேள்வி கேட்கிறார். அதைத்தொடர்ந்து விஷ்ணு, மாயா, ஐசு மூன்று பேரும் டான்ஸ் ஆடியது குறித்து நடிகரும் பாடகருமான யுகேந்திரன் "அவங்க செஞ்ச முறை தப்பு. இன்சல்ட் பண்ற மாதிரி பண்ணுனாங்க" என்று தலைவர் சரவணனிடம் கம்ப்ளைன்ட் பண்ணுகிறார்.

அதைத் தொடர்ந்து நிக்சன் "தப்பே பண்ணாம நான் ஏன்யா இப்படி நிக்கணும்" என்று கேள்வி கேட்கிறார். அடுத்ததாக விஷ்ணுவும், மாயாவும் அமர்ந்திருக்கையில் விஷ்ணு, "அவங்க டம்மி பாப்பாவா இருந்துகிட்டு நம்மளை கேட்கிறாங்க" என்று நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஜோவிகா நான் ஆறு பிரட் கேட்டு அவன் கிட்ட பிரட் இல்லன்னா என்ன பண்ணுவா..?" என்று கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் சரவணன் யோசித்துக்கொண்டிருக்கிறார்.
அப்போது கூல் சுரேஷ் "பயங்கரமான ஆளு தான் ஜோவிகா" என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து ஜோவிகா, "சரவணனிடம் நீ ஏதாவது பண்றியா" என்று ஒருமையில் சரவணனிடம் பேசுகிறார். இப்படியான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் ஜோவிகா கடந்த வாரம் விசித்ராவை ஒருமையில் திட்டினார். இந்த வாரம் சரவணனை ஒருமையில் பேசுகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications