உனக்கு “அந்த” தகுதி இருக்கா.. கடும் வாக்குவாதத்தில் நிக்சன்- பிரதீப்.. இந்த வாரம் பஞ்சாயத்து இருக்கு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் 11ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வீட்டிற்குள் மற்றவர்களை விட நாங்கள்தான் அதிகமாக என்டர்டைன்மென்ட் செய்து இருக்கிறோம் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது நிக்சனிடம் பிரதீப் உனக்கு தகுதி இல்லை என்று சொல்ல, அதைக்கேட்ட நிக்சன் கடும் கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டதும் முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகளும் பஞ்சமில்லாமல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சீசனில் முதல் நாளே 18 போட்டியாளர்கள் அறிமுகமான நிலையில் அதில் முதல் வாரத்தில் அனன்யா எலிமினேஷன் ஆனார்.
அதைத்தொடர்ந்து பவா செல்லத்துரை தான் நிகழ்ச்சியில் நீடிக்க முடியாது உடல்நிலை சரியில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து அவராகவே விலகி இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் போட்டியாளர்கள் எலிமினேஷனுக்காக காத்திருக்கின்றனர்.என்ற அதே நேரத்தில் தற்போது புது டாஸ்க் ஒன்று பிக்பாஸ் கொடுத்திருக்கிறார்.
அதில் ஸ்மால் பாஸ் மற்றும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் அந்த டாஸ்க்கில் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது இத்தனை நாட்களாக வீட்டிற்குள் நீங்கள் செய்த என்டர்டைன்மெண்ட்டை சொல்லி யார் அதிகமாக அனைவரையும் கவர்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். இந்த நிலையில் எல்லா போட்டியாளர்களும் தாங்கள் என்டர்டைன்மென்ட் செய்ததை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவில் பிரதீப் தான் இந்த வீட்டிற்குள் செய்த என்டர்டைன்மென்ட் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது நிக்சன் நீங்கள் சொல்கிற மாதிரி சண்டை போட்டு கண்டன்ட் கொடுக்கிறது எல்லாம் என்டர்டெயின்மென்ட் ஆகாது என்று சொல்ல, அதற்கு பிரதீப் இதை சொல்ல உனக்கு தகுதி கிடையாது என்று சொல்கிறார். உன் பெயர் நிக்சன் என்பதை பலர் நெல்சன் என்று சொல்கிறார்கள். அது தவறு என்று உன்னால் சொல்ல முடியவில்லை.

உன்னுடைய பெயரையே பிறரை சரியாக சொல்ல வைக்க முடியாத நீ வீரன் கிடையாது என்று பிரதீப் சொல்ல அதற்கு நிக்சன் என்ன பார்த்து தகுதி இல்லை என்று சொல்ல உனக்கு தகுதியே கிடையாது. நான் பாட்டு பாடி, ககஷ்டப்பட்டு,பல நாள் பட்டினியாக இருந்து போராடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஆனால் நீ நடிகன்னு சொல்லிக்கிட்டு, வெளியே இருந்து இந்த கேமை பக்காவா புரிஞ்சுகிட்டு சில நேரம் அமைதியா இருந்துகிட்டு, திடீரென்று வந்து ஏதாவது பேசி பிரச்சனையை பண்ணி எல்லாரும் உன்னை டார்கெட் பண்ற மாதிரி பேசிக்கிட்டு...,
அப்புறம் திடீர்னு ஒரு கம்பேக் கொடுப்பது போன்று நீ மாறுகிறா... இதுதான் உன்னுடைய ஸ்டேடர்ஜி. அது எனக்கு நல்லா தெரியுது. நான் உன்னை மாதிரி இங்க வரல. நான் என்னுடைய கேரக்டரை எல்லாருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று தான் வந்திருக்கேன். உன்னை மாதிரி ஒரு கேவலமான ஸ்டேடர்ஜியில் ஆடி இந்த கேமை ஜெயிக்க வேண்டும் என்று எனக்கு எந்த அவசியமும் இல்லை என்று நிக்சன் பேசி இருக்கிறார். அதோடு உனக்கு திறமை இல்லை. என்னை நீ பாடி காட்டு, ஆடி காட்டு காட்டுன்னு பேசாத, உன்னால முடியலையா நீ மூடிகிட்டு உட்காரு என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications