பிக் பாஸ் 7: திரையில் தோன்றிய வனிதாவின் இளைய மகள்..பிரதீப் சொன்ன வார்த்தை..கண்கலங்கிய ஜோவிகா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் 25ஆம் தேதிக்கான எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் புதியதாக போல் ஸ்டார் டாஸ்க் என்கிற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களும் சக ஹவுஸ்மேட்ஸ்களின் குடும்பத்தினர் பேசும் வீடியோக்களுக்கு லைக் அல்லது டிஷ் லைக் கொடுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

அப்போது ஜோவிகாவிடம் பிரதீப் லைக் கொடுத்துவிட்டு சொன்ன வார்த்தையால் அவர் கண் கலங்கி அழுது இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் கடந்த வாரம் எலிமினேஷன் காரணமாக பூர்ணிமா வெளியேறுவார் என்று அனைவரும் கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் விஜய் வெளியேற்றப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து பூர்ணிமா இந்த வார தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கேப்டன் பதவியை பெற்றதும் யுகேந்திரன், நிக்சன், அக்ஷயா, மணி, ஜோவிகா, பிரதீப் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பூர்ணிமா அனுப்பி வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவணன், விஷ்ணு, பிரதீப், யுஹேந்திரன், அக்ஷயா, நிக்சன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கின்றனர்.
இப்படியாக இருக்கும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இரண்டு ஸ்டார்களுக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது விஷ்ணு மற்றும் அக்ஷயா இடையே ஏற்பட்ட சண்டை இணையத்தில் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. விஷ்ணு கீழே விழுவதற்கு காரணமாக ஐசு இருந்தாலும் அந்த இடத்தில் அவர் விலகிப் போய்விட்ட நிலையில் அப்போது அங்கு வந்த அக்ஷயாவோடு விஷ்ணு சண்டை போட்டு இருக்கிறார்.
அது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியவில்லை என்றாலும் வெளியே அது குறித்த குறும்படங்கள் புகைப்படங்களோடு வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி இந்த வாரத்தில் கமல் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சண்டையில் அக்ஷயாவிடம் விஷ்ணு ஒருமையில் பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து அக்ஷயாவுக்காக பேசப்போன நிக்சன் மற்றும் விஷ்ணுவிற்கும் கூட சண்டை ஏற்பட்டது. இறுதியில் இந்த டாஸ்க்கில் அக்ஷயா வெற்றி பெற்றதால் ஜோவிகாவுக்கு இரண்டு ஸ்டார்கள் கிடைத்தது. இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்து இருந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் டாஸ்க் லெட்டரை ரவீனா படிக்கிறார்.
அதில் இன்று ஒரு போல் ஸ்டார் இருக்கிறது. ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் இரண்டு ஹவுஸ்மேட்டோட பேமிலி அனுப்பி இருக்கும் வீடியோக்களை பார்த்து லைக் அல்லது டிஸ்லைட் செய்வது தான் டாஸ்க் என்று கூறி இருக்கிறார். அதைத் தொடர்ந்து பிரதீப் அந்த டாஸ்க்கில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் வெளியே வந்து ஜோவிகாவிடம் லைக் கொடுக்கிறார்.

அப்போது அவர் பேசுகையில் எனக்கு வனிதாவை ரொம்ப பிடிக்கும். நான் வனிதாவை பார்ப்பதற்காக அங்கே போனேன். ஆனால் அங்கு திரையில் வந்தது வனிதா பொண்ணுதான் சோ உனக்கு நான் லைக் கொடுக்கிறேன் என்று அவர் சொல்லி இருக்கிறார். அதைத்தொடர்ந்து மணியின் பெற்றோர் பேசிய வீடியோவை பார்த்துவிட்டு வந்த ரவீனா உனக்கு நான் டிஸ்லைக் கொடுக்கிறேன்.
ஏன்னா கேம்முக்கு ஸ்டேட்டர்ஜி தேவை என்று விளக்கம் கொடுக்கிறார். அதை தொடர்ந்து மணியும் ரவீனாவும் தனியாக பேசிக் கொண்டிருக்கும்போது மணி, நீ உன் மனசாட்சி படி விளையாடல என்று சொல்ல அதற்கு ரவீனா என் மனசாட்சிக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் விளையாடினேன். என் மனசாட்சிக்கு என்ன தோணுதோ அப்படியே செஞ்சேன் என்று கூறுகிறார். இப்படியாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications