ரூலை மீறிய 2 போட்டியாளர்.. அதிரடியாக வெளியேற்றிய பிக் பாஸ்.. வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட பிரதீப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் மூன்றாம் தேதிக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ரூலை மீறி விட்டதாக விசித்திரா மற்றும் யுகேந்திரன் மீது பிக் பாஸ் அதிரடியான நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

bigg boss tamil season 7 October 3rd Promo 1 and fans reaction

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதீப் இடம் விஜய் சண்டைக்கு நிக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில் வழக்கமான சீசன்கள் போலவே இங்கேயும் சண்டை சச்சரவுகள் தொடங்கிவிட்டது. அதுவும் முதல் முறையாக முதல் வாரத்திலேயே இரண்டு எலிமினேஷன் என்று நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது.

bigg boss tamil season 7 October 3rd Promo 1 and fans reaction

அதில் நாமினேஷனுக்காக என்ன காரணம் சொல்வது என்று தெரியாமல் போட்டியாளர்கள் இரண்டு நாட்களுக்குள் சக போட்டியாளர்களை பற்றி புரிந்து கொள்ளாமல் கண்டதையும் சொல்லி சமூக வலைதளத்தில் ரசிகர்களுடைய கருத்துக்களை பெற்று வருகின்றனர். அதுவும் நேற்றைய நாமினேஷன் செய்யும் போது விசித்திரா ஐசுவின் உடை குறித்து நாமினேஷன் செய்தது தான் தற்போது இணையத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் பிரமோ வந்திருக்கிறது. அதில் சின்ன வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மட்டும்தான் சமையல் செய்ய வேண்டும் என்று விதிமுறையை மீறி யுகேந்திரன் மற்றும் விசித்திரா அவர்களுக்கு உதவி செய்ததால் அவர்கள் இருவரும் இரண்டாவது வீட்டிற்கு போக வேண்டும் என்று பிக் பாஸ் கூறுகிறார். அதற்கு பிரதீப் அப்போ அங்க இருந்து ரெண்டு பேரை இங்க அனுப்பி வெச்சிருங்க பிக் பாஸ் என்று கருத்து தெரிவிக்கிறார்.

bigg boss tamil season 7 October 3rd Promo 1 and fans reaction

அதற்கு விசித்திரா அங்கு இருந்து எதற்கு இரண்டு பேர் எக்ஸ்சேஞ்ச் ஆகி வரணும்னு நீங்க சொல்றீங்க என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பிரதீப், நீங்க ரெண்டு பேரும் இங்கிருந்து போறீங்க அப்போ எங்களுக்கு கடன் அடைக்க எங்களுக்கு ரெண்டு பேரு வேணும்ல என்று கேட்க, அதற்கு விசித்திரா எங்களுக்கு ஈக்குவலாக இரண்டு பேர் அங்க இருக்காங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா? என்று கேட்க, அதற்கு விஜய் என்ன பேசுறீங்கன்னு உங்களுக்கு புரியுதா பிரதீப்? என்று கேள்வி கேட்கிறார். இப்படியாக முதல் பிரமோவில் சண்டையோடு இன்று தொடங்குகிறது.

bigg boss tamil season 7 October 3rd Promo 1 and fans reaction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+