முதல் டாஸ்க்கில் வெயிட்டால் வந்த பிரச்சனை.. சட்டையை கழட்ட சொல்லும் கூல் சுரேஷ்.. ரவீனாவின் அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அக்டோபர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த சீசனின் முதல் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்களின் மேக்கப் பொருட்களை பிக் பாஸ் பிடுங்கிக் கொள்ளும் என்று கூறியிருக்கின்றனர்.

அதில் வெயிட் நிரூபிக்கும் போது கூல் சுரேஷ் சகப் போட்டியாளரின் சட்டையை கழட்ட சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று ஐந்தாவது நாள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இதில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் , உங்களுக்கான முதல் ஷாப்பிங் ரீப்ளேஸ்மென்ட் டாஸ்க் என்று ஸ்கிரிப்ட் பேப்பரை மாயா வாசிக்கிறார். அதோடு இந்த டாஸ்கின் பெயர் வெயிட் பாட்டி என்றும் இந்த டாஸ்க்கில் தோத்துட்டா மேக்கப் பொருட்கள் அனைத்தும் உங்களிடமிருந்து எடுத்துச் செல்லப்படும் என்று அதில் இருப்பதாக படித்து சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து ஒவ்வொருத்தரும் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பொருள்களை எடுத்து வந்து அதோடு எடை மேடையில் நிற்க வேண்டும் என்று சொல்கின்றனர். அப்போது ஒவ்வொரு அணியினராக எடுத்துக் கொண்டு வந்து எடை மேடையில் நிற்கும் போது கூல் சுரேஷ் உடன் சேர்ந்து ஒரு சிலர் எடை மேடை மீது நிற்கின்றனர். அப்போது கூல் சுரேஷ் "அடே யாராவது சட்டையை கழட்டுங்கடா" என்று சொல்ல அதற்கு ரவீனா சிரித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் கூல் சுரேஷ் தான் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்திருக்கிறார் என்று அதிகமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு யுகேந்திரன் கடந்த ஒரு சில நாட்களிலே ரசிகர்களின் மத்தியில் நல்ல மரியாதை பெற்று இருப்பதாகவும் கமெண்டில் கூறப்படுகிறது. அது போன்று அதிகமான ரசிகர்களுக்கு இரண்டு வீடு கான்செப்ட் பிடிக்கவில்லை என்றும் எதற்காக இவ்வளவு பில்டப்பில் இரண்டு வீடு கான்செப்ட் என்று கொடுத்தார்கள் என தெரியவில்லை என்றும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் பாபா செல்லத்துரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார். அவருடைய கதை சொல்லும் திறமை அதிகமானவரால் பாராட்டப்படுகிறது. ஆனால் அவர் பொது இடத்தில் எச்சில் துப்பினது தவறு என்பதை ஒத்துக் கொள்ளாதது பலருடைய அதிர்ச்சியும் பெற்று இருப்பது இந்த பிரமோவிற்கு வெளியான கமெண்டில் தெரிகிறது.

அதே நேரத்தில் உள்ளே ரவீனா எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொண்டிருப்பது பார்த்து ஒரு சிலர் தங்களுக்கு இவர் செய்ததை பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது என்று கூறி ஒரு நிலையில் இன்னும் ஒரு சிலர் ரவீனா தான் இந்த சீசன் ஓவியா என்று சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள். இன்னும் போகப் போக என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications