Bigg boss 7: செருப்படி வரைக்கும் போன இந்த சீசன் போட்டியாளர்கள்.. காரணம் இவர்தானா? பிக் பாஸின் அதிரடி
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் ஆறாம் தேதிக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் விஜய் ஷர்மா மற்றும் விஷ்ணு இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது.

அப்போது பிரதீப் பேசிக் கொண்டிருக்கும்போது கடுப்பான மாயா போயா யோவ் என்று திட்டி விட்டு செல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு சில மாதங்களாகவே ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். காரணம் இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பல புதிய மாற்றங்கள் இருக்கப்போகிறது என்று ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு பில்டப் அதிகமாக இருந்தது. அதாவது இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட இருக்கிறது என்றும் கூறப்பட்டது.
அதனால் இந்த சீசன் எப்படி இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு தான் தெரிகிறது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஜெயிலைதான் இந்த முறை பெரிய வீடாக கட்டி இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கி இருக்கிறார்கள் என்று, ஒவ்வொரு சீசனிலும் தண்டனை கொடுக்கப்படும் போட்டியாளர்கள் ஜெயிலுக்கு அடைக்கப்படுபவர்கள் ஆனால் அப்போது அவர்கள் சிறிய அறைக்குள் இருப்பார்கள் இப்போது ஒரு சின்ன வீடு என்று கூறப்பட்டு போட்டியாளர்கள் அங்கே மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மற்றபடி எப்போதும் போல தான் வழக்கமான சீசன் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் வழக்கம் போல இந்த சீசனில் பலரும் எதிர்பார்த்த காரசாரமான சண்டை தொடங்கி இருக்கிறது. அதாவது ப்ரோமோவில் ஆரம்பத்தில் விஜய் சர்மா பேசிக் கொண்டிருக்கிறார். அதில் பிரதீப் போகும் போது என்னை தட்டிட்டு போனாரு நான் திரும்பி இப்படி ஒரு கிக் பண்ணுனா மூக்கோ இல்ல வாயோ உடைந்து இருக்கும் என்று ஆக்சன் செய்து காட்டுகிறார்.
அதோடு வெளியில என்னை புடிச்ச பசங்க நிறைய பேர் இருக்காங்க. வெளியில் போனா அவ்வளவு தான் என்று எச்சரிக்கை செய்ய, அதற்கு பாவா செல்லதுரை விஜய் பேசியது சரி இல்லன்னு சொல்ல, அதற்கு விஷ்ணு நான் இப்ப உன்னை செருப்பால தட்டுறேன் முடிஞ்சா என்ன அடி என்று சொல்ல, நீ முதல்ல என்னை தட்டி பாரு என்று விஷ்னுவிற்க்கு விஜய் சர்மா சவால் விடுகிறார்.
பிக் பாஸ் தமிழ் 7: சின்ன பிக் பாஸ் குரல் யாருடையது தெரியுமா? இந்த பிரபலம் தானா? லீக்கான ரகசியம்
அதைத் தொடர்ந்து பிரதீப் இதுல எனக்கு மாற்றுக்கருத்து இருக்கு பிக்பாஸ். நான் எல்லோரையும் அடிக்கப் போறேன் என்று கூறிக்கொண்டு இதுகுறித்து பிரதீப் பேசிக் கொண்டிருக்கும்போது மாயா கடுப்பாகி போயா யோவ் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறார். இப்படியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications