பிக் பாஸ் 7: முதல் வாரத்திலேயே “அந்த” போட்டியாளருக்கு மஞ்சள் கார்டு.. எச்சரிக்கை கொடுத்த கமல்ஹாசன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் எட்டாம் தேதிக்கான முதல் பிரமோ வெளியாகியிருக்கிறது.
இதில் முதல் வாரத்தில் யார் எலிமினேஷன் ஆவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ஒரு போட்டியாளருக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.

அதுவும் இதுவரைக்கும் வன்முறையை தூண்டுபவர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்து வந்த நிலையில் முதல் முறையாக இந்த சீசனில் குறிப்பிட்ட போட்டியாளருக்கு கமல்ஹாசன் மஞ்சள் கார்ட்( ஸ்ட்ரைக் கார்ட்) வார்னிங் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் முதல் வாரத்திலேயே இந்த சீசனில் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு எலிமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் முதல் வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் நிலையில் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் அனன்யா இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் ஒரு சில தகவலின் படி நடிகர் யுகேந்திரன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது உறுதியாக இல்லாத நிலையில் தற்போது இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், பிரதீப் தன் மீது செருப்பு காலோடு உரசி விட்டு சென்றிருந்தார். அப்போது நான் கோபப்பட்டு அவருடைய முகத்தில் இடித்து இருந்தேன் என்றால் அவருடைய முகம் உடைந்து போய் இருக்கும். இல்லை அடித்திருந்தால் மூக்கு உடைந்து போயிருக்கும் என்றும் என்னை நேசிக்கும் பலர் வெளியே இருக்கிறார்கள். அவர் இங்கிருந்து வெளியே போனாலும் அவருக்கு என்ன வேணாலும் ஆகலாம் என்று மிரட்டுகிற தோணியில் பேசி இருந்தார்.
இந்த நிலையில் இது பற்றி இன்றைய முதல் ப்ரோமோவில் நடிகர் கமல்ஹாசன், விஜய் நீங்க முழங்கையை வச்சி இப்படி இடிச்சா மூக்கு, வாய் உடைந்துவிடும். எனக்கு வெளியே எல்லாம் ஆள் இருக்கு. அப்படின்னு நீங்க சொன்னீங்க என்று சொல்ல, அதற்கு விஜய் சார் அப்படியெல்லாம் இல்லை என்று சமாளிக்க முயற்சி செய்ய, அதற்கு கமல்ஹாசன் எங்ககிட்ட குறும்படம் எல்லாம் இருக்கு என்று சொன்னதும் விஜய் ஆமாம் என்பது போன்று தலையை அசைத்துக் கொண்டிருக்கிறார்.
அதற்கு கமல்ஹாசன் இது வன்முறை பேச்சுக்கான என்னுடைய கண்டனம் என்று மஞ்சள் கார்டு( ஸ்ட்ரைக் கார்ட்) ஒன்றை காட்டுகிறார். அதோடு இது மீண்டும் மூன்று முறை நீங்கள் வாங்கிட்டீங்கன்னா சந்தோஷமா என்கூட வந்து பேசிட்டு நீங்க கிளம்பி போய்கிட்டே இருக்கலாம் என்று எச்சரிக்கை செய்கிறார்.
இந்த ப்ரோமோவிற்கு ரசிகர்கள் பலர் இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் இதற்கு முன்பு சரவணன் பேசியதற்கு உடனடியாக அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது போல ஏன் இவருக்கு கொடுக்கப்படவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் இது விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஸ்ட்ராய்ட் கார்டு பார்த்து இனி பலர் ஆட்டத்தை குறைத்துக் கொண்டால் நல்லது என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications