பிக் பாஸ் 7ல் பழைய சவுண்ட் போட்டியாளரின் கணவர்..!? அதோடு நடிகர் விஜய் பட நடிகருமா? லீக்கான ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் முதல் சீசன் தொடங்கப்படும் போது பெரிய அளவில் எதிர்பார்ப்பும், சர்ச்சைகளும் இருந்தது.
அதற்குப் பிறகு தங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்துக் கொள்வதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க பலர் தொடங்கினார்கள். அது முதல் சீசனில் கிடைத்த வரவேற்பு காரணமாகவே தற்போது வரைக்கும் ஆறாவது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதுபோல இன்னும் ஒரு சில நாட்களில் அதாவது வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்க இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் தமிழில் இப்போதுதான் ஏழாவது சீசன் வருகிறது. பிற மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட சீசனை கூட கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி பெறுவதற்கு காரணம் இதற்கு தொகுப்பாளராக இருக்கும் கமல்ஹாசன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் என்ற பெயர் பட்டத்தோடு வலம் வந்த கமல்ஹாசன் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இருந்தார்.
அதோடு ஒவ்வொரு வாரமும் இவர் பஞ்சாயத்து செய்வதை பார்ப்பதற்காகவே பலர் வார இறுதி நாட்களில் இந்த நிகழ்ச்சிக்காக முன்பு ஆஜராகி விடுவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீடு அல்ல இரண்டு வீடுகள் என்றும் ஏற்கனவே ப்ரோமோ வெளியாகிவிட்டது. இந்த நிலையில் சும்மாவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இப்போது இரண்டு வீடு என்பதால் என்ன மாதிரி இருக்கப் போகிறதோ என்று இந்த சீசனுக்கு ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.

அந்த வகையில் தற்போது உத்தேச பட்டியலில் பல பிரபலங்களின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. அதில் இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஒரு பிரபலத்தின் கணவரும், நடிகர் விஜய்யின் திரைப்படத்தில் நடித்த நடிகரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த நிலையில் இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. காரணம் இதற்கு முன்பு உள்ள சீசன்களை விட இந்த சீசனில் இரண்டு வீடு இருப்பதால் அதிகமான பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவதால் அதற்கு தகுந்த மாதிரி பிக் பாஸ் அணியினரும் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதுபோல நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த நடிகர் விஜய் வர்மா இந்த சீசனில் போட்டியளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதியும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் புதியதாக இவர்கள் இருவரின் பெயரும் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதை நிலையில் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் ஒரு சில தினங்களில் தெரியவரும்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications