மீண்டும் பிக் பாஸுக்குள் பூர்ணிமாவுக்கு கமல் கொடுத்த அதிகாரம்.. ரகசியமெல்லாம் உடைஞ்சு போச்சு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 6 ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நேற்று பணப்பெட்டியோடு வெளியே கிளம்பிய பூர்ணிமா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறார். அதுவும் கமல்ஹாசன் உடன் மேடையில் பூர்ணிமா நிற்பதை பார்த்து விஷ்ணு முதலான போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் மீண்டும் பூர்ணிமாவிற்கு பிக் பாஸ் மேடையில் வாழ்த்து கிடைத்திருப்பது குறித்து அவருடைய ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். ஏற்கனவே பூர்ணிமா நிகழ்ச்சியில் இருந்து வெளியானதும் வெளியே டான்ஸ் ஆடிய வீடியோக்களும் மறைந்த விஜயகாந்தின் சமாதியில் அஞ்சலி செலுத்திய வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பூர்ணிமா போட்டியாளர்களை பற்றி பேசி இருப்பது உண்மைக்கு முரணாக இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களோடு நிகழ்ச்சி தொடங்கியிருந்த நிலையில் இப்போது உள்ளே 7 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதிலும் ஒரு போட்டியாளர் அதாவது விஷ்ணு நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார்.
இதனால் மீதமுள்ள ஆறு போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷனக்கான நாமினேஷனில் இருக்கின்றனர். அவர்களின் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த பூர்ணிமா நேற்று ஸ்மார்ட் ஆக யோசித்து 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்
ஆனால் இன்று சனிக்கிழமை எபிசோடில் மீண்டும் கமல்ஹாசன் முன்பு பூர்ணிமா ஆஜராகி இருக்கிறார். இதுவரைக்கும் ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் பூர்ணிமாவை வார இறுதி நாட்களில் கேள்வி மேல் கேள்வி கேட்டு குழப்பியது பார்த்து இருப்போம். ஆனால் இன்று 16 லட்சம் பணத்தை எடுத்ததும் கெத்தாக பூர்ணிமா மேடையில் வந்திருக்கிறார்.
அப்போது கமல்ஹாசன் உங்க நண்பர்களை பற்றி டைரக்ட்டா கமெண்ட்டை நீங்க சொல்லுங்க என்று சொல்ல, அதற்கு பூர்ணிமா மாயாவை பார்த்து சும்மா வீட்டுக்கு வந்தேன்னா துரத்தி துரத்தி அடிப்பேன் என்று சொல்கிறார். அதற்கு மாயாவும் சிரித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து விசித்திராவிடம் நீங்கள் டைட்டில் வின்னர் ஆனீங்கன்னா செம இன்ஸ்பிரேஷன் என்று சொல்லிக்கொண்டு,
அடுத்ததாக மணியிடம் உனக்கு முன்னாடி நான் பெட்டியை தூக்கிட்டு போயிட்டேனடா என்று கேட்க அதற்கு மணி கெக்க பேக்க என்று சிரித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக பூர்ணிமாவின் பேவரைட் சண்டைக்காரரான விஷ்ணுவிடம் பேச போக விஷ்ணு நீங்க என்னை சும்மாவே திட்டுவீங்க. இப்ப சொல்லவா வேணும் என்று சொல்ல அதற்கு பூர்ணிமா சூப்பர் என்கிற ஒரு சிக்னல் மட்டும் கொடுக்கிறார்.
அதற்கு அங்கிருக்கும் மக்கள் அனைவரும் கைத்தட்டுகின்றனர். அடுத்ததாக அர்ச்சனாவிடம் டைட்டில் வின்னர் நீங்கதான் என்று பூர்ணிமா சொல்ல அதற்கு அர்ச்சனா ஐயோ சும்மா இருங்கம்மா சார் வேற இருக்காரு என்று சைகை கட்டுகிறார். இப்படியாக ப்ரோமோவில் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications