பிக் பாஸ் 7: பாண்டியன் ஸ்டோரை விடுங்க.. நடிகர் சரவணன் முதல் நாளே செய்த அலப்பறை. இவரா இப்படி?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இதில் 13 வது போட்டியாளராக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சரவணன் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அவருக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரும், அவருடைய நிஜ குடும்பத்தினரும் வந்திருந்தனர். இந்தநிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. மாலை 6:00 மணியிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பல போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர்.
அதில் 13வது போட்டியாளராக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சரவணன் அறிமுகம் ஆகி இருக்கிறார். நிகழ்ச்சியில் அவரை மேடைக்கு அழைத்த கமல்ஹாசன் அவரிடம் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றியும் பேசி இருந்தார்.
அப்போது தனக்கு நடிக்க வேண்டும் என்று அதிகமான ஆர்வம் இருந்ததாகவும் அந்த நேரத்தில் தான் ரீல்ஸ் போட்டு தன்னுடைய திறமையை வெளிக்காட்டி கொண்டு வந்ததாகவும் அதன் மூலமாகத்தான் தனக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறியிருந்தார்.

அத்தோடு நடிகர் சரவணனுக்காக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்கும் நடிகை தீபிகா மற்றும் கண்ணனின் அண்ணன் கதிராக நடிக்கும் குமரனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். அதுபோல இந்த சீசனில் யாருக்கும் செய்யாத செயலை நடிகர் சரவணனுக்காக நடிகர் கமல்ஹாசன் செய்திருந்தார். அதாவது பாண்டியன் ஸ்டோர் நடிகர் குமரன் மற்றும் தீபிகாவை பிக் பாஸ் மேடையில் அழைத்து அவர்கள் கையால் சரவணனுக்கு பரிசு பொருள் கொடுத்திருந்தனர். அந்த பரிசு பெட்டியில் சரவணனுக்கு கடலைமிட்டாய் இருந்தது.
இதுவரைக்கும் சீரியலில் சில மாதங்களாகவே சரவணன் அடுத்தடுத்து பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டிருப்பது போன்று கேரக்டரிலே பார்த்து அவரை திட்டியவர்களுக்கு இன்று மேடையில் இவருடைய கலகலப்பான பேச்சு பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கும். அதுவும் பிக் பாஸ் வீட்டிற்குள் போனதும் அங்கிருக்கும் பிரபலங்கள் அனைவரிடமும் இவர் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். இதை பார்த்தால் கண்டிப்பாக இவர் சீரியலில் வருவது போன்ற கேரக்டர் கிடையாது என்று தெரிகிறது ஆனாலும் பொருத்திருந்து பார்ப்போம். இனி இந்த வீட்டிற்குள் எப்படி இருக்க போகிறார் என்பதை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications