பிக் பாஸ் 7இல் கலந்து கொள்ளும் பிரபல எழுத்தாளர்..இவர் நடிகரும் தான்.. இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்கலையே
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது.
இதில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீசனில் முதல் முறையாக பிரபல எழுத்தாளர் ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறாரா அதோடு அவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் அவர் பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தமிழ் ரசிகர்களின் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 100 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் முதல் சீசன் தொடங்கப்படும் போது பெரிய அளவில் எதிர்பார்ப்பும், குழப்பங்களும் இருந்தது.
ஆனால் அதற்குப் பிறகு தங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்களே என்பதை பார்த்துக் கொள்வதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் பார்க்க தொடங்கினார்கள். அதனாலேயே முதல் சீசனில் அதிகமான வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து முதல் சீசனை வைத்து அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு சமீபத்தில் 6 சீசன்கள் முடிவடைந்தது.

இப்போது நாளை அக்டோபர் ஒன்றாம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளிலும் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் தமிழில் இப்போதுதான் இது ஏழாவது சீசன் வந்திருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் கடந்த ஆறாவது சீசனில் அதிகமான சர்ச்சைகளை பிக் பாஸ் நிகழ்ச்சி சந்தித்தது. அதனாலேயே இந்த முறை பெரிய அளவில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் இந்த முறை இதுவரைக்கும் இல்லாத வகையில் இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட இருக்கிறது. யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள்? இரண்டு வீடு எப்படி எல்லாம் போட்டியாளர்கள் பங்கு பெறுவார்கள்? டாஸ்க்கள் எப்படி இருக்கும்?? கேமரா எப்படி இருக்கும்? வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும்? என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் மொத்த விஷயத்தையும் பிக் பாஸ் அணியினர் ரகசியமாக வைத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் எப்போதும் போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று உத்தேச பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதில் பல பிரபலங்களின் பெயர் ஏற்கனவே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதல் முறையாக பிரபல எழுத்தாளர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் லீக் ஆகி இருக்கிறது.
அவர் வேறு யாரும் இல்லை பிரபல எழுத்தாளர் "பாவா செல்லதுரை" தான். இவர் சிறுகதை எழுத்தாளராகவும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் மொழி பெயர்ப்பாளராக இருக்கும் இவர் அதோடு நடிகர், கதை சொல்லி என்ற பன்முகத்தன்மை கொண்டவர். அதுமட்டுமல்லாமல் பாவா செல்லதுரை தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இருக்கிறார். அதுபோல திருவண்ணாமலையில் வம்சி புத்தக நிலையம் மற்றும் பதிப்பகத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவருடைய சொந்த ஊர் திருவண்ணாமலை தான். அங்கு ஒருமுறை சாரான் போட்டிங் பள்ளியில் கலை இலக்கிய மாநாடு நடைபெற்றிருக்கிறது. அப்போது அங்கு ஷைலஜா என்ற பெண்ணை இவர் சந்தித்து இருக்கிறார். பிறகு இவர்கள் காதலித்து திருமணமும் நடைபெற்று இருக்கிறது. பாவா சங்கரின் மனைவியும் மொழிபெயர்ப்பாளராக தான் இருக்கிறாராம். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அதோடு பாவா சங்கர், ஜோக்கர், பேரன்பு, குடிமகன், சைக்கோ என்று ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைய போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஒருவர் கலந்து கொண்டது கிடையாது.
இந்த முறை புது முயற்சி எடுத்திருக்கும் நிலையில் இப்போது அதிகமானோர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நம்முடைய சார்பாகவும் இவருக்கு வாழ்த்துக்களை கூறிக்கொள்ளலாம். நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல எழுத்தாளர்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பார். அந்த வகையில் இந்த முறை ஒரு எழுத்தாளர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலையில் பல கருத்து பரிமாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications