பிக் பாஸ் 7: பூர்ணிமாவிடம் பிக்பாஸுக்குள் இதனால் தான் சரியா பேசல.. உண்மைகளை உளறிய நடிகை இந்துஜா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பூர்ணிமாவிடம் அவருடைய தோழியான நடிகை இந்துஜா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்த நேரம் சரியாக பேசவில்லை.
பிக் பாஸ் வீட்டிற்குள் பார்க்கிங் திரைப்பட ப்ரமோஷனுக்காக நடிகை இந்துஜா சென்று இருந்தார். அப்போது தன்னிடம் இந்துஜா சரியாக பேசவில்லை என்று பூர்ணிமா பீல் பண்ணி இருந்தார்.
ஆனால் நான் எதனால் பூர்ணிமாவிடம் பிக் பாஸ் வீட்டிற்குள் சரியாக பேசவில்லை என்பது பற்றி நடிகை இந்துஜா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீரியல் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிவு வருவதற்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பார்க்கிங் திரைப்பட ப்ரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் அந்த திரைப்படத்தின் கதாநாயகி நடிகை இந்துஜா இருவரும் வருகை தந்திருந்தனர்.
அப்போது இந்துஜா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த எல்லா போட்டியாளர்களிடம் பேசுவது போன்று பூர்ணிமாவிடம் பேசவில்லை. ஆனால் பூர்ணிமாவும் இந்துஜாவும் நெருங்கிய தோழிகள் ஏற்கனவே பூர்ணிமாவிற்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அவார்டு ஃபங்ஷனில் கூட இந்துஜா என்னுடைய பல வருட நெருங்கிய தோழி பூர்ணிமா தான் என்று உருக்கமாக பேசியிருந்தார். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் எதிரெதிரே பார்த்த பிறகு பெரிய அளவில் இந்துஜா பேசிக் கொள்ளவில்லை.

பூர்ணிமாவே இந்துஜாவிடம் கேள்வி கேட்கும் போதும் கூட அதற்கு சரியாக இந்துஜா பதிலளிக்கவில்லை. இது இணையத்தில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்துஜா ரவிச்சந்திரன் மேயாத மான் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி பெரிய அளவில் தெரிய தொடங்கினார். அதைத் தொடர்ந்து விஜயுடன் பிகில் திரைப்படத்திலும், தனுஷ் உடன் நானே ஒருவன் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் இப்போது அவர் பார்க்கிங் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பூர்ணிமாவிடம் இந்துஜா நடந்து கொண்ட விதம் குறித்து இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்துஜாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவீங்கில் பூர்ணிமா இல்லை என்பதை குறித்தும் அதிகமான ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பார்க்கிங் திரைப்படத்தின் வெற்றி விழாவில் இந்த சம்பவம் தொடர்பாக இந்துஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இந்துஜா நாங்க படத்தின் ப்ரோமோஷன்காக தான் பிக் பாஸ் வீட்டிற்குள் போனோம். எங்களுக்கு பல விதிமுறைகளை சொல்லித்தான் உள்ளே அனுப்பினாங்க. அதோட யாரும் யாருக்கும் ஃபேவரைட் காட்டாதீர்கள் என சொல்லியிருந்தார்கள்.
நானும் பூர்ணிமாவும் கல்லூரி தோழிகள். பொதுவாகவே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் நாங்கள் பேசிக் கொள்வோம். மற்றபடி பூர்ணிமா ஒரு இனிமையான பெண். கல்லூரியில் பூர்ணிமா எனக்கு நெருங்கிய தோழி. அவள் நன்றாக பிக் பாஸ் விளையாடி வருகிறார். ஆனாலும் ஒரு சில விஷயங்களை தவிர்த்தால் இன்னும் பெரிய அளவில் பூர்ணிமா வருவார் என்று அந்த பேட்டியில் இந்துஜா கூறி இருக்கிறார்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications