பிக் பாஸுகுள் காதல் சர்ச்சை.. அந்தப் போட்டியாளரை டேக் செய்து ஐசு அம்மா வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டு ஐஷு உள்ளே நிக்சனோடு பழகிக் கொண்ட விதம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் உன்னை காதலிக்கவில்லை என்பதை வெளிப்படையாகவே நிக்சனிடம் ஐசு கூறியிருந்தார்.

bigg boss tamil season 7 posted by Aisu Amma tag to raveena

இந்த நிலையில் ஐசுவின் அம்மா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவரை டேக் செய்து வீடியோ ஒன்றை போஸ்ட் போட்டிருக்கிறார். இது இப்போது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் காதல் கண்டென்டுகளும் சர்ச்சைகளும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது .அதில் இந்த சீசனலும் விதிவிலக்காக இல்லாமல் அதே பாணியை பின்தொடர்கிறது.

அந்த வகையில் ஆரம்பத்தில் ரவீனா மற்றும் மணி இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கம் குறித்து பல்வேறு கேள்விகளும் வதந்திகளும் பரவி வருந்தது. இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்று சர்ச்சைகள் கிளம்பி கொண்டு இருந்த நிலையில் ரவீனாவின் அம்மா மணி ஏற்கனவே எங்களுக்கு தெரியும். மணி ரவீனாவை பொருத்தவரையில் ஒரு அண்ணன் போலத்தான் ஒரு நண்பராக இருக்கிறார் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே நிக்சன் மற்றும் ஐசு இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். ஆரம்பத்தில் நட்ப்பாக இருந்த இவர்கள் ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் இருப்பது நட்பா காதலா என்ற குழப்பம் அங்கிருக்கும் போட்டியாளர்களையும், வெளியே இருக்கும் ரசிகர்களையும் தொற்றிக் கொண்டது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டாக போன போட்டியாளர்கள் இவர்களை வார்னிங் செய்திருந்த நிலையில் அதை யோசித்த ஐசு நிக்சனிடம் எனக்கு ஏற்கனவே ஒரு காதலன் வெளியே இருக்கிறார்.

என்னுடைய பெற்றோர் இன்று நிகழ்ச்சிக்கு வரும்போது என்னிடம் சொல்லித்தான் அனுப்பினார்கள், எந்த கெட்ட பெயரும் எடுத்து விடக்கூடாது என்று. ஆனால் நம்ம பழகுறது வெளியே தப்பாக தெரிகிறது. இதை நிறுத்திக் கொள்வோம் என்கிற தோணியில் பேசி இருந்த நிலையில் இனி நான் இந்த வீட்டிற்குள் உன்னுடன் பர்சனலாக பேச மாட்டேன் என்று நிக்சன் கூறி இருந்தார்.

ஆனால் சில மணி நேரங்களுக்குள் மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே தட்டில் சாப்பிட்டு ஊட்டிக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் எப்போதும் போலவே இருக்க இது பற்றி பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பல்வேறு கேள்விகளும் குவிந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நிக்சனிடம் இது பற்றி ஐஸு மீண்டும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இதனால் நிக்சன் ரொம்பவே ஃபீல் பண்ணி புலம்பி கொண்டு இருந்தார். அதை தொடர்ந்து பிபி டேலண்ட் ஷோ நடைபெற்றது. அப்போது ரவீனாவும் ஐசுவும் சேர்ந்து டான்ஸ் ஆடி இருந்தனர். அதில் நோ மீம்ஸ் நோ என்கிற வார்த்தையை இருவரும் கடைசியில் காட்டி இருந்தனர். இந்த நிலையில் இந்த வீடியோவை ஐசுவின் அம்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதில் ரவீனா மற்றும் ஐசுவை டேக் செய்து ஃபயர் விட்டிருக்கிறார்.

இது பல்வேறு கருத்துக்களை குவித்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த ஆறு நாட்களாக உள்ளே காதல் சர்ச்சைகள் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இது பற்றி அவருடைய பெற்றோர் எந்த போஸ்ட்டும் போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+