பிரதீப் பெண்களை எவ்வளவு மோசமாக பேசி இருக்கிறார் தெரியுமா? லிஸ்ட் இதோ! எதனால் இவ்வளவு சப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை எபிசோடில் கமல் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி வைத்திருந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சிலர் வைத்த குற்றச்சாட்டுகளால் பிரதீப்பால் பெண்களுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் பாதுகாப்பு இல்லை என்று கூறி அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

bigg boss tamil season 7 Pradeep Anthony VULGAR CHEAP Mindset

ஆனால் பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தது தவறு என்று இணையத்தில் அதிகமானோர் கருத்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் என்ன மாதிரி எல்லாம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

பொதுவாக நம்முடைய மனநிலையின்படி எல்லோருக்குமே ஒரு இளகிய மனம் இருக்க தான் செய்கிறது. அதுவும் ஒருவர் தான் ரொம்ப கஷ்டப்பட்டவன் அல்லது அம்மா அப்பா இல்லாதவர் என்று சொல்லும் போது அவர் மீது நம்மை அறியாமல் ஒரு அனுதாபம் ஏற்பட்டு விடுகிறது. அதுபோலத்தான் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் அறிமுகமானதும் பிரதீப் மீது அனைவருக்கும் ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் நாளே தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சக போட்டியாளர்களின் மனதை குழப்பிவிட்டு சூப்பராக விளையாட்டை பிரதீப் தொடங்கியிருந்தார். அதனால் இவர் தான் இந்த சீசனில் டைட்டில் வின்னராக வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். விளையாட்டிலும் பிரதீப் சக போட்டியாளர்களுக்கு அறிவுரை என்கிற பெயரில் அவருடைய மண்டையை கழுவி அவர்களை குழப்பம் அடைய வைத்து அவர்களை அறியாமலேயே தன் பேச்சை கேட்க வைப்பதில் கில்லாடியாக தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்திருந்தார்.

இதுவும் ஒரு விளையாட்டு யுக்தியாக தான் இருந்து வருகிறது. ஆனாலும் பிரதீப் ஆரம்பத்திலிருந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களை காதை மூடிக்கொள்ள வைக்கும் வகையில் இரட்டை அர்த்தங்களில் பேசிக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். நீங்கள் இப்போது கேட்கலாம் பிரதீப் மட்டுமா இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் வீட்டில் இருக்கும் எல்லாரும் தான் பேசுகிறார் என்று, ஆனால் யார் பேசினாலும் அது தவறு தானே.

இப்போது தண்டனை பிரதீப்புக்கு கிடைத்திருக்கிறது. இனி தண்டனை அவரைப் போலவே பேசிக் கொண்டிருப்பவர்களுக்கும் கண்டிப்பாக கிடைக்கும். இப்போது உள்ள சூழ்நிலையை படி பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்ததால் அவருக்கு ரசிகர்களின் மத்தியில் அனுதாபம் அதிகரித்திருக்கிறது அதே நேரத்தில் உள்ளே அவரைப் போலவே இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுடைய கேரக்டர் இப்போது ரசிகர்களின் மத்தியில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

அதுவே பிரதீப்பை போலவே உள்ளே இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி பேசிக்கொண்டிருக்கும் நபர்களுக்கும் தண்டனை தானே..!? அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட சில மோசமான செயல்கள் பலருக்கும் தெரிந்திருக்காது. காரணம் ஒரு சிலர் எபிசோடுகளை மட்டுமே பார்த்திருப்பார்கள். எபிசோடுகளில் பல காட்சிகள் கட் செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் 24 மணி நேர எபிசோடு அதிகமான காட்சிகளில் பிரதீப் கண்டென்ட் கொடுக்கிறேன் என்கிற பெயரில் கண்டமேனிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார். அது யார் யாரிடம் என்னென்னவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார் என்று லிஸ்ட் போட்டு பார்க்கலாம். அதில் முதல் ஆளாக நிகழ்த்தி தொடங்கி ஒரு வாரத்திற்குள் விசித்ராவிடம் பிரதீப் காதல் கண்டன்ட் என்கிற போர்வையில் தான் அவரை அடிக்கடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

அது குறித்து விசித்திராவே சொல்லி இருக்கிறார். எனக்கு பிரதீப் என்னை கிண்டல் செய்தது பெரிய அளவில் தவறாக தெரியவில்லை. என்னை கஷ்டப்படுத்துற மாதிரி அவர் என்னை கிண்டல் பண்ணவில்லை என்று ஆனால் பார்க்கும் ரசிகர்களுக்கு அப்படி இருக்கவா செய்யும்? ஆரம்பத்தில் ஒரு முறை எல்லோரும் காய்கறி கட் பண்ணி கொண்டு இருப்பார்கள்.

அப்போது இந்த வீட்டில் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோற்றால் அவர்களுடைய மேக்கப் பொருட்களை பிக் பாஸ் எடுத்துக் கொள்வேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இப்படி எல்லாம் சொல்லாமல் டாஸ்க்கில் தோற்றால் இப்போது ஆண்கள் தனியாக பெட்டிலும், பெண்கள் தனியாக பெட்டிலும் படுப்பது போன்று இல்லாமல் எல்லோரும் யார் பக்கத்திலும் படுக்கலாம் என்று ஒரு ரூல்ஸ் போடலாம், அப்படி ஒரு ரூல்ஸ் போட்டால் நான் விசித்திரா பக்கத்தில் தான் படுப்பேன் என்று கூறியிருந்தார்.

இது என்ன அர்த்தத்தில் ஒரு பெண் பக்கத்தில் நான் படுப்பேன் என்று அடம் பிடித்தார் என்று தெரியவில்லை. அதுபோல இன்னொரு முறை கார்டன் ஏரியாவில் மணி, ரவீனா, பிரதீப் என ஒரு சிலரோடு சேர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது, இப்போது நடக்கும் டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் வீட்டினர்கள் ஜெயிப்பார்களா? அல்லது பிக் பாஸ் வீட்டினர்கள் ஜெயிப்பார்களா? என்று இவர்களுக்குள் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது.

அதற்கு ரவீனாவிடம் பிரதீப் பிக் பாஸ் வீட்டினர்கள் தான் ஜெயிப்பார்கள் அப்படி அவர்கள் ஜெயித்தால் நீ என்ன பண்ணுவ என்று கேட்க, அதற்கு ரவீனா என்ன பண்ணனும் என்று கேட்க வாயில வாங்கணும் என்று பிரதீப் டக்கென்று சொல்கிறார். இதில் எத்தனை அர்த்தங்கள் இருக்கிறது...? என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரியும்.

இதைத்தான் கமல் முன்பு ரவீனா என்னுடைய அருணாக்கயிறை பற்றி பேசுகிறார் என்று சொல்லிவிட்டு ஒரு இரண்டு மூன்று நிமிடம் பேசுவார் அப்போது அது பீப் சவுண்ட் போடப்பட்டது. அதனால் இதைத்தான் ரவீனா சொல்லி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல வைல்ட் கார்ட் என்டிரியாக வந்த முதல் வாரத்திலேயே விசித்திராவும் அவர்களோடு ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்திருப்பார்.

அப்போது அவரை பிக் பாஸ் கன்க்ஷன் ரூமிற்கு கூப்பிட்டு இருப்பார். அப்போது விசித்திரா அன்னபாரதி உள்ளே வரும்போது வைத்திருந்த பிளாஸ்டிக் மல்லிகை பூவை வாங்கி அன்று தன்னுடைய தலையில் வைத்திருக்கிறார். இதைப் பார்த்த பிரதீப் விசித்ரா நடந்து போய்க்கொண்டிருக்கும்போது அங்க பாரு விசித்திரா பிக் பாஸ் கூப்பிட்டதும் அப்படியே ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போறது போல மல்லிகைப்பூ வச்சுக்கிட்டு போறா,

அவ கையில அந்த சொம்பு மட்டும் தான் மிஸ்ஸிங் என்று கிண்டல் செய்கிறார். அது இப்ப வரைக்கும் விசித்திராவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெளியே வந்த பிறகு தான் தெரியும். இன்று விசித்திரா பிரதீப்புக்காக இவ்வளவு சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரைப் பற்றியும் பிரதீப் என்னவெல்லாம் பேசி இருக்கிறார் என்று விசித்திராவுக்கு வெளியே வந்த பிறகு தெரியும்.

அதுபோல அர்ச்சனா வீட்டிற்குள் வந்ததுமே அர்ச்சனாவை பற்றி மாயா குரூப்பிடம் பிரதீப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அர்ச்சனா வாயை பார்த்தால் அவளால் எல்லா வேலையும் நல்லா பண்ண முடியும்னு தோணுது என்று இரட்டை அர்த்தத்தில் கிண்டல் செய்கிறார். ஆனால் அதே அர்ச்சனா தான் இப்போது பிரதீப்க்காக குரல் எழுப்பி அனைத்து போட்டியாளர்களிடம் பிரதீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறு என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த வரைக்கும் மற்றவர்களோடு கம்பேர் பண்ணும் போது பிரதீப் பேசியது தப்பில்லை என்று சொல்பவர்கள் பெண்களைப் பற்றி இவ்வளவு தரக்குறைவாக பிரதீப் பேசியது சரியா? என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+