பிக் பாஸ் 7: ஜோவிகா எலிமினேஷனை மறைமுகமாக கிண்டலடித்த பிரதீப்..? வனிதா வெளியிட்ட அதிரடி பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரதீப் வெளியிட்ட பதிவு இணையத்தில் பல்வேறு கருத்துகளை குவித்து வருகிறது.

அதாவது பிரதீப் ஒரு நாய்க்குட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு JOJO என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

இதனால் ஜோவிகா இந்த வாரம் வெளியேறப் போகிறாரா? அதனால் தான் பிரதீப் இந்த மாதிரி கேப்ஷன் கொடுத்திருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் வனிதா தன்னுடைய instagram ஸ்டோரியில் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

 bigg boss tamil season 7 Pradeep posted a photo of a puppy and captioned it as JOJO

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து சண்டை சச்சரவு இல்லாமல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருந்து வருகிறது. இதில் யார் பக்கம் சரி யார் பக்கம் தவறு என்று யூகிக்க முடியாத வகையில் தான் உள்ளே போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதீப் வெளியேற்றம் இணையத்தில் பெரும் போரையே ஏற்படுத்தி விட்டது.

கமல்ஹாசன் உள்ளே இருக்கும் சில போட்டியாளர்களின் பேச்சை நம்பி எதையும் விசாரிக்காமல் முடிவெடுத்துவிட்டார் என்று பலர் குற்றம் சாட்டி இருந்தனர். அதே நேரத்தில் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்று ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதீப்க்கு ஆதரவாக உள்ளே ரெட் கார்ட் கொடுத்த புள்ளி கேங்க்கு ஆதரவாக நடிகை வனிதா ரிவியூவில் பேசி வருவதால் அவரையும் மர்ம நபர் ஒருவர் முகத்தில் தாக்கி இருந்தார் என்று வனிதா கூறி இருந்தார்.

இப்படியாக பிரதீப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரதீப் தன்னுடைய twitter பக்கத்திலும் சரி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சரி, கூலான போஸ்ட்களை போட்டுக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கூட நான் இதற்கு பொம்பள பொறுக்கி என்ற பெயரோடு இருந்திருக்கலாம்.

வெளியே ஒவ்வொரு வாரமும் வரும் போட்டியாளர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டு என்னை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாரையும் நான் மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டியதாக இருக்கிறது. எனக்கு நீங்கள் என்ன செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து என்னிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று தொந்தரவு செய்யாதீர்கள்.

நான் என்னுடைய வேலையை பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய twitter பக்கத்தில் பிரதீப் ஒரு நாய்க்குட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு ஜோ ஜோ என கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதனால் ஜோவிகா தான் இந்த வாரம் வெளியேறப் போகிறாரா? அதனால் தான் பிரதீப் இப்படி அழைக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று தன்னுடைய ட்விட்டரில் ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியாக போட விடமாட்டேன் என்கிறார்களே என்ற இன்னொரு போஸ்டையும் போட்டு இருக்கிறார். அதே நேரத்தில் வனிதா தன்னுடைய instagram ஸ்டோரியில் சிலர் தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் மக்களிடம் எதையும் கேட்காத ஒரு பெண்ணை விட யாரும் கடினமாக உழைக்க மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார்.

அதனால் ஜோவிகா தான் இந்த வாரம் வெளியேறப் போகிறாரா? அதனால் தான் மக்கள் ஜோவிகாவிற்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக வனிதா இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+