கமல் பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்த உண்மையான காரணம் இதுதான்..? பிரபல செய்தி வாசிப்பாளர் ஓப்பன் டாக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் பிரதீப்க்கு அதிரடியாக ரெட் கார்ட் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதில் பிரதீப்க்கு கமல் ரெட் கார்ட் கொடுத்தே ஆக வேண்டும் இல்லை என்றால் நான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போய் விடுவேன் என்று சொன்னதற்கு காரணம் இதுதான் என்று சில காரணத்தை செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

அதோடு கடந்த சீசனில் நடந்ததற்கும் இப்போது பிரதீப் நடந்து கொண்டதற்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கிறது என்றும் பெண் போட்டியாளர்கள் சொன்ன காரணத்தால் பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுக்கவில்லை என்று அதிகமான மீம்ஸுகளும் குவிந்து வருகிறது.
அதில் சமூக வலைத்தளத்தில் இப்போது எந்த பக்கம் பார்த்தாலும் அங்கே பிக் பாஸ் பற்றிய விவாதம் தான் காரசாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்க்காத ரசிகர்கள் கூட இப்போது இந்த நிகழ்ச்சி பற்றி வெளியாகி வரும் வீடியோக்களை பார்த்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வருபவர்களும் அதிகமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
காரணம் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்த நிலையில் அதில் 5 போட்டியாளர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு இருந்தனர். கடந்த வாரத்தில் எலிமினேஷனலில் அன்னபாரதி வெளியேற்றப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த சீசனில் உள்ளே இருந்த அதிகப்படியான போட்டியாளர்கள் கெட்ட வார்த்தையை சரளமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல இரட்டை அர்த்த வசனங்களை பேசி கிண்டல் செய்பவர்களும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறார்கள். 24 மணி நேர எபிசோடில் இதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் இவர்கள் தைரியமாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் கடைசியில் சில போட்டியாளர்கள் சேர்ந்து கொண்டு பிரதீப் மீது அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு முத்திரையை குத்தி அவரை வெளியேற்றி வைத்திருந்தனர்.
இது தற்போது இணையத்தில் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி கமெண்ட் போர் நடந்து வருகிறது. அதில் அதிகமானோர் பிரதீப் செய்தது தப்புதான் ஆனால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து உடனடியாக வெளியேற்றப்பட்டது ,அவர்களிடம் ஒரு கருத்து கூட கேட்கப்படவில்லை என்பதும் பலருடைய ஆதங்கமாக இருக்கிறது.
அதிலும் கமல்ஹாசன் பெண் போட்டியாளர்களிடம் பிரதீப்க்கு எதிரான குற்றச்சாட்டுகளை பற்றி கேட்டு கொண்டிருந்தார். ஆனால் பிரதீ்ப்பிடம் இதுகுறித்து உன்னுடைய விளக்கம் என்ன என்பது பற்றி கேட்கவில்லை என்றும், அதே நேரத்தில் பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுக்கும் முடிவை சேனல் தரப்பில் இருந்து எடுக்கவில்லை என்றால் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து கிளம்பி போய்விட வேண்டும் என்று நினைத்தேன் என்று பேசி இருந்ததும் தற்போது விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் இந்த அளவிற்கு முடிவெடுத்திருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தன்னுடைய கருத்தை பிரபல சேனலில் பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் இதற்கு முந்தைய சீசனிலும் அசீம் குறித்து சகப் போட்டியாளர்கள் பல்வேறு குற்றசாட்டுகளை வைத்திருந்தனர்.
ஆனால் அப்போது அவருக்கு இரண்டு முறை ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு உள்ளே தான் இருந்தார். ஆனால் இப்போது பிரதீப்பிடம் அவருடைய கருத்து என்னவென்று கூட கேட்காமல் அவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் அசீம் என்னதான் பிரச்சனை செய்தாலும் கமல் சொன்னால் நான் இதைக் கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
ஆனால் இப்போது பிரதீப் இரண்டு மூன்று முறை நான் கமல் சார் வந்து சொன்னாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கறாராக பேசிக் கொண்டிருக்கிறார். இது பிரதீப்புடைய கேரக்டரா என்று தெரியவில்லை. ஆனாலும் இது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு அவமானம் தானே?
கமல் தலைமை வகித்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும்போது அங்கு இருப்பவர் கமலுடைய பேச்சைக் கேட்கவில்லை என்றால் அவர் அந்த நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கி பிரயோஜனம் இல்லை என்று நினைத்து விட்டார் போல, அதனால் தான் கமல் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து இருப்பார் என்று ரஞ்சித் கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications