பிக் பாஸ் தமிழ் 7: முடிவடைந்த சூட்.. உலகக்கோப்பையும், அரசியலும்... இத்தனை பிரச்சனைகள் இருக்கா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அது பற்றி சில தகவல்களும் பரவி வருகிறது.
இந்த வருடம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடக்க இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். ஆனாலும் முதல் ஐந்து சீசன்களுக்கு இருந்த வரவேற்பு கடந்த ஆறாவது சீசனில் கொஞ்சம் குறைவு என்று தான் கூற வேண்டும். ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகளில் அதிகமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது பலருக்கும் சலிப்பு ஏற்பட்டு இருந்தது.
அதோடு மொத்த சீசனுக்கும் ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கடைசி நேரத்தில் நடிகர் அசீம்க்கு "டைட்டில்" கொடுக்கப்பட்டதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் இல்லாத வகையில் கடந்த சீசனில் டைட்டில் வின்னர் குறித்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வருடத்திற்கான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட் முடிவடைந்து இருக்கிறது. இதில் கமல்ஹாசன் நடித்து முடித்து இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் ஆக பலருக்கும் பரீட்சையமாகி இருந்தவர் முதல் முறையாக தொகுப்பாளராக பெரிய அளவில் வெற்றி பெற வைத்தது என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை இவரை தவிர வேறு யாராவது தொகுத்து வழங்கியிருந்தால் இந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்குமா? என்று சொல்ல முடியவில்லை. ஆனால் வழக்கம் போல இந்த சீசனிலும் அவர் தொடர்ந்து இருக்கிறாராம்.
இந்த நிலையில் இவ்வளவு சீக்கிரமாக பிரமோ ஷூட் முடிவடைந்து இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்காமல் தான் இருக்கிறது. காரணம் விரைவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கப்பட இருப்பதால் விரைவாக இந்த நிகழ்ச்சி இந்த முறை தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியலில் சில வேலைகள் இருப்பதால் தான் ப்ரோமோ சூட் விரைவாக எடுக்கப்பட்டது என்றும் செய்திகள் பரவி வருகிறது.
அதுபோல ஒவ்வொரு வருடமும் ஒரு "தீம்" பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும். இந்த முறை என்ன மாதிரியான தீம் இருக்கப் போகிறது என்பது பலருடைய எதிர்பார்ப்பு. அதே நேரத்தில் இந்த முறை நடிகர் கமல்ஹாசன் திமுகவில் சேர வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சு அதிகமாக அடிபட்டு வருவதால், ஒருவேளை அது சம்பந்தமாக கூட இந்த முறை தீம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஒரு சில நாட்களில் மொத்தமும் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications