பூர்ணிமா குனியும் போது அந்த மாதிரி சொன்னார்..பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்க காரணம் இதுதான்- ரவீனா

Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை பிரதீப்க்கு அதிரடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அது குறித்து இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது விசித்திரா,ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்களிடம் நீங்கள் பெண்களிடம் பிரதீப் தவறாக நடந்து கொண்டான் என்று சொன்னது தவறு என்று பேசி இருக்கிறார்.

bigg boss tamil season 7 Raveena about This is the reason for giving red card to Pradeep

அதற்கு ரவீனா நான் எதற்காக பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதில் பூர்ணிமா பற்றி தவறான அர்த்தத்தில் பிரதீப் கமென்ட் செய்தார் என்றும் பேசி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. அதிலும் பிரதீப் கடந்த சனிக்கிழமை திடீரென்று ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதீப்க்கு ஆதரவாக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதோடு ரசிகர்களும் பிரதீப்க்கு ஆதரவாக மீம்ஸ்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். வெளியே வந்த பிரதீப் தனக்கு கிடைத்த ஆதரவை பார்த்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலு மீம்ஸ் வெளியீட்டு இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கிறது என்கிற தோணியில் பதிவு போட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று இது பற்றிய விவாதம் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்குள் நடந்திருக்கிறது. அப்போது விசித்திரா,அங்கு இருந்தவர்களிடம் பிரதீப்க்கு எல்லாரும் சேர்ந்து ரெட் கார்டு கொடுத்தது தவறு. அவர் ஏதாவது தப்பா பேசி இருந்தா அப்போதே நீங்க தட்டி இருக்க வேண்டும்.

இத்தனை பேரும் சேர்ந்து பிரதீப்க்கு பெண்கள் வன்கொடுமையாளர் என்கிற தோணியில் பட்டம் கொடுத்து வெளியே அனுப்பி இருப்பது அவனுடைய வாழ்க்கையை முடித்து விடும். இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அப்போது ஸ்மால் பாஸ் வீட்டில் இவர்களோடு இருந்த ரவீனா நான் எதற்காக பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தேன் தெரியுமா? என்று கேள்வி கேட்டு, போன வாரம் புட்பால் கேம் நடந்ததுலா அப்போ பூர்ணிமா தான் ஜட்ஜா இருந்தாங்க. அப்போ பூர்ணிமா குனியும் போது பூர்ணிமாவை பார்த்து பிரதீப் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருந்து சத்தமாக ரொம்ப குனியாத அவனுங்க எந்த பந்தை அடிக்கிறாங்கன்னு தெரியல என்று கத்தி பேசினார்.

அதுபோல பூர்ணிமா அப்போ ஷார்ட்ஸ் போட்டு இருந்தாங்க. அதனால தன் மடியில் பெட்ஷீட் வைத்து மறைச்சுகிட்டு இருந்தாங்க. அதுக்கு பிரதீப் ஏய் மறைக்காதன்னு சொல்லி சிரிச்சார் என்று ரவீனா கூறி இருக்கிறார். அதே நேரத்தில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பிரதீப் ரசிகர்கள் டாஸ்க் நடந்தபோது பிரதீப் பூர்ணிமாவிடம் தான் பேசியதற்கு விளக்கம் கொடுத்த ஒரு வீடியோவையும் வைரல் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் பூர்ணிமா பிரதீப்பிடம் "நீ ஸ்மால் பாஸ் வீட்டுக்குள்ள இருந்து என்ன கத்தி பேசுன என்று கேட்க, அதற்கு பிரதீப் நான் உன்னை தப்பா பேசல. நீ அங்கு குனிஞ்சி நின்ன, அப்போ உனக்கு முன்னாடி ஒருத்தன் பந்து அடிப்பதற்கு தயாரா இருந்தன். உனக்கு பின்னாடி ஒருத்தன் நின்னான்.

அப்போ அவன் எந்த பந்தை அடிக்க போறான்னு தெரியலன்னு தான் சொல்லி கிண்டல் பண்ணினேன் என்று அதில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதோடு பிரதீப் எனக்கு பெண்களுடைய உடம்பெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது என்கிற தோணியிலும் பூர்ணிமாவிடம் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். தற்போது இது இணையத்தில் அதிகமாக பேசப்படும் பொருளாக மாறி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+