பூர்ணிமாவிடம் இந்துஜா பேசாததற்கு காரணம் இதுதான்.. இது போல பலருக்கு நடந்திருக்கு.. நண்பர் சொன்ன தகவல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பூர்ணிமாவிடம் அவருடைய தோழியான இந்துஜா, வீட்டிற்குள் வந்திருந்த நிலையில் பேசவில்லை என்று பூர்ணிமா பீல் பண்ணிக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் பார்க்கிங் திரைப்பட பிரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த இந்துஜா அவருடைய நெருங்கிய தோழியான பூர்ணிமாவிடம் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை.
இந்த நிலையில் இந்துஜா பூர்ணிமாவிடம் இப்படி நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது பற்றி பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் பார்க்கிங் திரைப்பட பிரமோஷனுக்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இந்துஜா இருவரும் சென்றிருந்தனர். அப்போது இருவருமே மாயா மற்றும் பூர்ணிமாவிடம் அதிகமாக பேசவில்லை. அதிலும் பூர்ணிமாவின் நெருங்கிய தோழியாக இருந்த இந்துஜா பூர்ணிமாவை கண்டு கொள்ளவே இல்லை.
சக போட்டியாளர்களிடம் பேசிய வார்த்தை கூட பூர்ணிமாவிடம் பேசவில்லை. இதனால் இந்துஜா பிக் பாஸில் இருந்து கிளம்பிய பிறகு பூர்ணிமா மாயா மற்றும் விஷ்ணுவிடம் பீல் பண்ணி பேசி இருப்பார். அதில் இந்துஜா என்னுடைய நெருங்கிய தோழி. நானும் அவளும் கல்லூரியில் இருந்து பிரண்ட்ஸாக இருக்கிறோம்.
ஆனால் இப்போ அவள் என்னிடம் நடந்து கொண்ட விதம் என்னை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. என்னுடைய கண்ணை பார்த்து கூட பேசவில்லை. அப்போ ஏதோ தப்பா வெளியே போய்க்கொண்டிருக்கிறது. ஒரு வேலை நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தால் கூட, இந்துஜா என்னிடம் சொல்லி இருக்கலாம்.
ஒருவேளை நான் இந்துஜா இடத்தில் இருந்தால் என்னுடைய தோழியிடம் அவருடைய தப்பை எடுத்துச் சொல்லுவேன். ஆனால் இந்துஜா எதற்காக என்னை அவாய்ட் பண்றா என்று தெரியலையே என்று பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு இந்துஜாவின் இன்ஸ்டாகிராம் ஐடியில் ரசிகர்கள் பூர்ணிமாவை பாலோ பண்ணுகிறாரா என்று செக் பண்ணி பார்க்கும்போது இந்துஜாவின் பாலோவிங் லிஸ்டில் பூர்ணிமாவின் பெயர் இல்லாததால் அது குறித்தும் அதிகமாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொருவரும் போகும் போதே சொல்லி தான் அனுப்பப்படுகிறார்கள். உள்ளே உங்களுக்கு நண்பர்களோ தெரிந்தவர்களோ அல்லது நீங்கள் யாருக்கேனும் பேனாக இருந்தால் கூட அதை உள்ளே காட்டிக் கொள்ளக் கூடாது.
வெளியே வந்து உங்களுடைய பீலிங்கை நீங்கள் சொல்லலாம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் நீங்கள் எல்லா போட்டியாளரிடமும் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதுபோல தான் நடந்து கொள்ள வேண்டும் என்று தான் சொல்லி உள்ளே அனுப்பப்படுகிறார்கள். அந்த விதிமுறையை மீறக் கூடாது என்பதற்காக கூட இந்துஜா பூர்ணிமாவிடம் பேசாமல் வந்து இருக்கலாம்.
ஒருவேளை வெளியே வந்து பிறகு பூர்ணிமாவிடம் இந்துஜா இதற்கான விளக்கத்தை கொடுப்பார். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் வீட்டிற்குள் உறவினர்கள் போகும்போது கூட இதுபோலத்தான் சொல்லி அனுப்பப்படுகிறது. அதனால் தான் ஃபிரீஸ் டாஸ்க்கில் வீட்டிற்குள் வரும் உறவினர்கள் எல்லா போட்டியாளர்களிடமும் சகஜமாக பேசுவார்கள் என்றும் அந்த பேட்டியில் கிரிக்கெட் வர்ணனையாளர் பேசி இருக்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications