பிக் பாஸ் 7; விஷ்ணுவின் பெற்றோரை அசிங்கப்படுத்திய விசித்ரா.. வலுக்கும் கண்டனங்கள்.. வெடித்த பிரச்சனை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஷ்ணுவின் பெற்றோரை அவமானப்படுத்தி விசித்திரா பேசியதற்கு ரசிகர்களின் மத்தியில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
விஷ்ணு தன்னிடம் நடந்து கொள்ளும் முறை சரி இல்லை என்றும் உன்னை இப்படி வளர்த்ததற்கு உன்னுடைய அம்மா அப்பா வெட்கப்பட வேண்டும் என்றும் விசித்திரா பேசி இருக்கிறார்.
அதோடு என்னுடைய பையன்களை நான் இப்படி வளர்க்கவில்லை. என் முன்னாடி என் பையன்கள் என் முகத்தைப் பார்த்து பேசுவதற்கே பயப்படுகிறார்கள் என்றும் விசித்திரா பெருமையாக பேசி இருந்தார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னர் இவர்தான் என்று உறுதியாக யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலை தான் இருக்கிறது.

போட்டியாளர்கள் ஒருநாள் நன்றாக இருக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இவரா என்று சொல்ல வைத்து விடுகிறார்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில நெகட்டிவ் கருத்துகளை பெற்றிருந்தவர்கள் திடீரென்று நல்லவர்களாக ரசிகர்களின் மத்தியில் மாறிவிடுகிறார்கள். ஆனால் அதற்கு பிறகு திடீரென்று அவர்களுடைய உண்மை முகத்தை காட்டி ரசிகர்களை அதிர்ச்சி அடையவும் வைத்து விடுகிறார்கள்.
அந்த வகையில் ஒருவராகத்தான் இப்போது விசித்திரா மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் விசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் பூமராக பேசிக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு அதிகமாக இருந்தது. அதுபோல பிரதீப்போடு ஆரம்பத்தில் அதிகமான சண்டை சச்சரவுகளில் விசித்திரா ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பிறகு பிரதீப் வெளியே சென்றதும் திடீரென்று பிரதீப்புக்கு ஆதரவாக விசித்திரா பேசியது ரசிகர்களின் மத்தியில் அதுவரைக்கும் விசித்ராவுக்கு இருந்த நெகட்டிவ் இமேஜை உடைத்து விட்டது.
பிறகு இவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் ஒரு சில நாட்களாக விசித்திராவின் நடவடிக்கை ரசிகர்களின் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அர்ச்சனா பீரியட்ஸ் நேரத்தில் தனக்கு வயிறு வலிக்கிறது என்று பேசியதை குறித்து நேற்றைய டாஸ்க்கில் விமர்சித்து பேசியதை வைத்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று விஷ்ணுவிடமும் அவருடைய அம்மா அப்பாவை பற்றி திட்டி இருக்கிறார். அதாவது ஒரு சில நாட்களாகவே விஷ்ணு மற்றும் விசித்திராவிற்கு இடையே அடிக்கடி சண்டை முட்டி கொள்கிறது. அது போல டாஸ்க்கில் விசித்திரா நடிக்கிறார். எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. என் வயதிற்கு மரியாதை தர வேண்டும் என்று பேசுகிறார்.

ஆனால் மரியாதை கொடுக்கும் அளவிற்கு அவருடைய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விஷ்ணு பேசி இருந்ததுக்கு விசித்திரா அவரிடம் விளக்கம் கேட்டிருந்தார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே விசித்திரா எனக்கும் பையன்கள் இருக்கிறார்கள். என்னுடைய பையன் எல்லாம் உன்ன மாதிரி கிடையாது. என் முகத்தை பார்த்தே பேச பயப்படுவாங்க.
உன்னை உங்க அம்மா அப்பா இப்படி வளர்த்ததற்கு வெட்கப்படனும். அவங்களும் இந்த வீடியோவை பார்த்து கிட்டு தானே இருப்பாங்க. இப்படி மாத்தி மாத்தி நீ பேசுற என்று திட்டி இருக்கிறார். அதோடு என்னுடைய பையன்கள் எல்லாம் உன்ன மாதிரி கிடையாது என்றும் கூறியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications