தொடங்கியது பிக் பாஸ் 7.. இரண்டு வீட்டை அறிமுகப்படுத்த கமல் போட்ட நாடகம்.. இத்தனை உள்குத்துகளா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 பிரமாண்டமாக இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் எந்த முறை இரண்டு வீடு கான்செப்ட் இருக்கும் நிலையில் அது குறித்த விளக்கத்தை நடிகர் கமல்ஹாசன் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கமல் இரட்டை வேடத்தில் பிக் பாஸ் வீட்டை சுற்ற காண்பித்து இருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.

அந்த வகையில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நடிகர் கமல்ஹாசன் வழக்கம்போல மேடையில் அனைவருக்கும் வணக்கத்தை சொல்லி வரவேற்று விட்டு உள்ளே வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்யும்போது பிக் பாஸ் மேடையில் அலாரம் அடிக்கிறது.
அதை பார்த்து அதிர்ச்சியான கமல்ஹாசன் என்ன ஆச்சு ஏதேனும் கண்டஸ்டண்ட் உள்ளே போயிட்டாங்களா? என்று குழப்பத்தோடு அகம்டிவி வழியாக உள்ளே பார்க்க அங்கே மெட்ராஸ் பாஸை பேசியபடி இன்னொரு கமல் வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் ஒவ்வொரு சீசனிலும் நடிகர் கமல்தான் வீட்டை முழுக்க சுற்றி காண்பித்து வீட்டில் நடக்கும் கலவரங்களுக்கு முதல் நாளே பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பார்.
ஆனால் இன்று இரண்டு வீடு கான்செப்ட் என்பது பற்றியும் இரண்டு வீடுகளுக்கு ஒரே வாசல் என்பது பற்றியும் இரண்டு வீட்டிற்கும் ஒரே கிச்சன் என்பது பற்றியும் புது நாடகத்தின் மூலமாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் ஆரம்பமே இந்த முறை அதிகமான பில்டபோடு இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த மாதிரி வீடு பிரம்மாண்டமாக தான் இருக்கிறது. ஆனாலும் போட்டியாளர்கள் வந்த பிறகு தான் அந்த வீடு பெரிய அளவிற்கு கலவரமாக மாறப்போகிறது என்பது தெரியும். ஆனால் ஆரம்பத்திலேயே இரண்டு வீட்டிற்கும் இரண்டு பாஸ் இருப்பார்கள் என்று கமல் விளக்கம் கொடுத்திருக்கிறார். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications