பிக் பாஸ் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜோவிகா அத்தை- மாமா வெளியிட்ட திடீர் வீடியோ.. வனிதா கொடுத்த கேப்ஷன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியளராக நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா கலந்து கொண்டு இருக்கும் நிலையில் அவர் குறித்து அவருடைய அத்தை மாமா திடீரென்று வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கின்றனர்.
ஜோவிகா இத்தனை நாட்களாக தன்னுடைய அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்திருந்த நிலையில் இப்போது அவருடைய தந்தையான ஆகாஷின் சகோதரியும் அவருடைய கணவரும் ஜோவிகா குறித்து சில அட்வைஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர்.

இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வனிதா அதற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப் போகிறது என்ற செய்திகள் வெளியான நேரத்தில் இருந்து இந்த சீசனில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா கலந்து கொள்ளப் போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்து வந்தது. அதை குறித்து மறைமுகமாக வனிதாவும் தன்னுடைய instagram பக்கத்தில் அப்பா அப்போ வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
தன்னுடைய மகள் நடிப்பு துறையில் பெற்ற சர்டிபிகேட் களையும் வெளியிட்டு அதோடு தன்னுடைய மகளுக்கு 18 வயது முடிந்து விட்டது என்பதையும் அழுத்தமாக கூறியிருந்தார். இதனால் இந்த சீசனில் கண்டிப்பாக வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா கலந்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
அது போலவே இந்த சீசனில் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே ஜோவிகாவிற்கும் விசித்திராவிற்கும் இடையில் படிப்பு விஷயத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து இணையத்தில் பெரிய போர் நடைபெற்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பிரச்சனை கிளம்பி கொண்டிருக்கும்போது வனிதா தன்னுடைய மகளுக்கும் முழு சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அப்போது ஜோவிகா பேசிய வீடியோ ஒன்றையும் அவருடைய தந்தை ஆகாஷ் தனக்கு அனுப்பியதாக வனிதா இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் இப்போது அதைத் தொடர்ந்து ஆகாஷ் உடைய சகோதரியும் அவருடைய கணவரும் ஜோவிகா குறித்து பேட்டி வீடியோ ஒன்றில் பேசி இருக்கின்றனர்.

அதில் ஜோவிகா நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுடைய விளையாட்டு ரொம்ப அழகா இருக்கிறது. உங்களுடைய தனித்துவம் நன்றாக இருக்கிறது. அதுபோல நீ எப்போதும் சின்சியரா இருப்பா, அதுபோல இந்த வீட்டுக்குள்ளேயும் நீ இருக்கிற. உன்னுடைய ஹார்ட் வொர்க் உனக்கு பல வெற்றிகளை தேடித்தரும் என்று ஜோவிகாவிற்கு வாழ்த்துக்களை கூறி வீடியோ ஒன்றை வனிதாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வனிதா இதுதான் ஜோவிகாவின் அத்தையும் மாமாவும் என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோவிற்கு அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications