பிக் பாஸ் 7: ஆண் குளிக்கிறதை எட்டி பாக்குறாங்க.. திடீர் குற்றச்சாட்டு வைத்த தாமரை..அது யார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பரபரப்பாக பல சண்டை சச்சரவுகள் இருக்கும் நிலையில் இந்த சீசனில் பிரதீப் வெளியேற்றம் குறித்து பிக் பாஸ் பிரபலமான தாமரை செல்வி தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்கு சேஃப்டி இல்லை என்று சில போட்டியாளர்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கு எதிராக தாமரை செல்வி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

பிரதீப் பாத்ரூம் போகும்போது கதவை தாழ்ப்பாள் போடவில்லை என்று குற்றம் சாட்டியை நிக்சன் குறித்து தாமரை செல்வி தன்னுடைய கோபத்தை காட்டியிருக்கிறார்.
தற்போது சமூக வலைதளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சு வார்த்தை தான் அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. எந்த பக்கத்தில் பார்த்தாலும் அங்கே பிரதீப் வெளியேற்றம் சரியானது அல்ல என்று பல பிரபலங்கள் சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களிலும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர்.
அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழைய போட்டியாளர்கள். பலர் கமல்ஹாசன் மற்றும் விஜய் டிவி இப்போது செய்திருப்பது சரியான செயல் அல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இப்போது பல சின்னத்திரை சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் தாமரை செல்வி தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

அதில் இந்த சீசனை நான் ஆரம்பத்தில் இருந்தே பார்த்து தான் வந்தேன். அப்போது எனக்கு பிரதீப்புடைய விளையாட்டு பிடித்திருந்தது. ஆனாலும் அவர் ஒரு சில நேரங்களில் பேசும் வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. ஏன் இந்த பையன் திடீர்னு தப்பு தப்பா எல்லாம் பேசுறானேனு நினைச்சு இருக்கேன். ஆனால் அவன் அவனோட அம்மா அப்பா இல்லாமல் வளர்ந்து இருக்கிறான். விளையாட்டை பற்றி எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறான்.
உள்ளே எல்லா போட்டியாளர்களும் கெட்ட வார்த்தையும், இரட்டை அர்த்த வார்த்தைகளும் பேசும் போது இவனும் அப்படி இருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் திடீரென்று கடந்த வாரத்தில் பிரதீப்பை வெளியேற்றியது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு பிறகு அந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு எனக்கு பெருசாக பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் பிரதீப் செய்யும் சில செயல்கள் எனக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால் அவன் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன்.
ஏனென்றால் வீட்டிலிருந்து மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும்போது பிரதீப் சரியாகத்தான் விளையாடிக் கொண்டிருந்தார். இப்படி இருக்கும் போது பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதுமே எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று சொல்லவே முடியாது.
அங்கு பலபேர் இரவெல்லாம் கூட தூங்காமல் கண் விழித்தபடி பல கேமராக்களை வைத்து உள்ளே நடப்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் இருக்கும் சீசனில் கூட ஒரு நிகழ்வு நடந்தது. அதைப் பற்றி இப்போ வெளியே சொல்ல கூடாது. அப்படி ஒரு பிரச்சினை நடந்ததும் உடனே எங்களை வெளியே இருக்க சொல்லிவிட்டு, உள்ளே எல்லோரும் வந்து விட்டார்கள்.
அதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் எவ்வளவு பாதுகாப்பு இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதுபோல பிரதீப் பாத்ரூம் போகும்போது கதவை பூட்டிக்கொண்டு போகவில்லை என்று நிக்சன் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அது சரிதான் பிரதீப் அப்படி கதவை பூட்டிக் கொள்ளாமல் போனது தவறுதான்.
ஆனால் பிரதீப்பை வெளியேற்றுவதற்கு முந்தைய நாள் இரவில் பெட்ரூமில் பூர்ணிமா குரூப்பில் உள்ளவர்கள் விஷ்ணு குளித்துக் கொண்டிருப்பதை நான் முழுசா பார்த்து விட்டேன் என்று சொல்லி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. இதை நானும் டிவியில் பார்த்தேன். இது மட்டும் சரியா? ஒரு ஆம்பள குளிச்சுகிட்டு இருக்கும்போது அவன் கதவை லாக் பண்ணாமையா குளிச்சிருப்பான்? அதை எதுக்கு இவங்க போய் எட்டிப் பார்க்கணும்? இவங்க பண்ணுனா மட்டும் சரியா? என்று கடும் கோபமாக அந்த பேட்டியில் தாமரை செல்வி கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications