பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை மாற்றப்பட்ட விதிமுறை.. இரண்டு வீடு கான்செப்டில் இத்தனை கஷ்டமா?
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.

அதைத் தொடர்ந்து இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல விதிமுறைகள் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. அதிலிருந்து எப்போது ஏழாவது சீசன் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இருந்து சர்ச்சைகள் மற்றும் சண்டைகளிலே இந்த சீசன் இருந்த நிலையில் இனி வரும் ஏழாவது சீசனில் எப்படி இருக்க போகுதோ என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் ஏழாவது சீசன் தொடங்கப்படும் என்று செய்திகள் வலம் வருகிறது. அதே நேரத்தில் ஏழாவது சீசனுக்கு முதல் ட்ரைலர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கிறது. அதுவும் இதுவரைக்கும் இல்லாத வகையில் கடலின் நடுவே இருக்கும் பாலத்தில் கமல்ஹாசன் நின்றபடி ஏழாவது சீசன் தொடங்கப்படுவது குறித்து செய்கை மூலமாகவே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என் என்று பல பெயர் பட்டியல்கள் வெளியாகி வருகின்றது. அதே நேரத்தில் இந்த சீசனில் மேலும் சில விதிமுறைகள் மாற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு சில அப்டேட்டுகளும் வலம் வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதாவது வரும் அக்டோபர் 8ஆம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கி விட்டால் போட்டியாளர்கள் வழக்கம் போல தீபாவளி, வருடப்பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகை எல்லாவற்றையுமே பிக் பாஸ் வீட்டில் கொண்டாட இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதோடு இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட இருக்கிறது.

அதில் ஒரு வீடு எப்போதும் இருப்பது போல பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் அங்கு சகல வசதிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்னொரு வீடு எந்த வசதியும் இருக்காதாம். அங்கு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்பவர்கள் தங்கவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த இரண்டாவது வீட்டில் கடுமையான டாஸ்குகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு வீடு கான்செப்ட் மற்ற மொழிகளில் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் இப்போது தமிழில் வர இருப்பதால் சுவாரஸ்யம் கூடுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications