பிக் பாஸ்க்கு பிறகு கப்போடு அர்ச்சனா வெளியிட்ட முதல் வீடியோ.. நெகட்டிவர்ஸ்களுக்கு தரமான பதிலடி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அர்ச்சனா முதல் முறையாக தான் ஜெயித்த கப்போடு தன்னுடைய நண்பர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சியில் இருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினர்களும் நண்பர்களும் பிரம்மாண்டமாக வரவேற்பு அளித்திருக்கும் நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்வான அர்ச்சனாவிற்கு அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எளிமையாக வரவேற்பு வைத்திருக்கின்றனர்.
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த பிறகு அர்ச்சனா எந்த போஸ்டும் வெளியிடாமல் இருக்கும் நிலையில் ரசிகர்கள் சிலர் அவர் என்ன தலைமறைவாக இருக்கிறாரா? எதனால் இப்படி ரசிகர்களுக்கு ஒரு நன்றி கூட தெரிவித்து வீடியோ இன்னும் அர்ச்சனா போடவில்லையே என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்களும் நாங்கள் வெளியே வந்ததும் தங்களுக்கு ஓட்டு அளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அர்ச்சனா மட்டும் இன்னும் எந்த வீடியோக்களோ புகைப்படங்களோ வெளியிடாமல் இருக்கிறார். அதோடு அர்ச்சனா டைட்டில் ஜெயித்தது கூட பிஆர் உதவியோடு தான் பணம் கொடுத்து பிஆர் ஓட்டு போட்டதால்தான் அவர் ஜெயித்தார் என்றெல்லாம் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் அது குறித்து அர்ச்சனா எந்த விளக்கமும் கொடுக்காமல் இருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் தனக்கு அதிகமான மன நெருக்கடி வந்தபோது நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே போய் ஒரு வாரம் யாரிடமும் எதுவும் பேசாமல் என்னுடைய அம்மா அப்பா, எனக்கு உண்மையாக இருக்கிறவங்க மடியில் நான் படுத்து என்னுடைய கவலைகள் எல்லாம் போகுற வரைக்கும் அழனும். அவங்க தான் நான் அழுவதை கேவலமா பேச மாட்டாங்க. அதை சொல்லி சிரிக்க மாட்டாங்க. அவங்க தான் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருக்கிறாங்க.
அவங்கள நான் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் ரொம்ப மிஸ் பண்றேன். அதனால வெளியே போனதும் அவங்களோடு சில நாட்கள் நான் நேரத்தை கழித்து விட்டு தான் எந்த வேலையையும் செய்வேன் என்று சொல்லி இருந்தார். இந்த நிலையில் இப்போது அதுபோலத்தான் அர்ச்சனா செய்து கொண்டிருக்கிறாரா? என்றும் யோசிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் ஜெயித்ததும் அர்ச்சனாவிற்க்கு அவருடைய குடும்பத்தினர்கள் எளிமையாக வரவேற்பு வைத்திருக்கின்றனர்.
அதாவது சின்னதாக ஒரு டென்ட் போட்டு அதற்குள் வண்ண விளக்குகளால் அலங்கரித்து அங்கு ஒரு கேக் வைத்து அர்ச்சனாவை கட் பண்ண வைத்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அந்த டென்ட் வெளியே தன்னுடைய உறவினர்கள் மற்றும் சகோதரியோடு அர்ச்சனா ஆட்டம் போட்டு இருக்கிறார்.
அந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அர்ச்சனாவின் ரசிகர்கள் இந்த வீடியோவை சுட்டிக்காட்டி அர்ச்சனா பிக் பாஸ்க்கு பிறகு தலைமுறைவாக இருக்கிறாரா? ஒளிந்து இருக்கிறாரா என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு இது வீடியோ தான் பதிலடி என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications