பிக் பாஸ் 7: குட்டு உடைந்தது.. இன்று குறும்படம் இருக்கு.. அதுவும் மாயாவிற்கு.. கமலே செய்த எதிர்பாரா சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று 76 வது நாள் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இன்று சனிக்கிழமை என்பதால் இன்று கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோக்களில் கமல்ஹாசன் இந்த வாரம் நடந்த நிகழ்வுகளை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சிலரை பாராட்ட வேண்டும் அதே நேரத்தில் சிலர் செய்த வேலைகளை வெளி காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மாயாவிற்கு குறும்படம் ஒளிபரப்பாக இருக்கிறது என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு இன்றைய எபிசோடில் என்னவெல்லாம் நடக்க இருக்கிறது என்பதை குறித்து பார்க்கலாம்.

இந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்து அதிகமான சண்டை சச்சரவுகள் இருந்தாலும் சில நேரங்களில் இந்த நிகழ்ச்சி பல சர்ச்சையான செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது. அது இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் கமல்ஹாசன் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் கூட இந்த சீசனில் குறைய தொடங்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும் பிரதீப்பிற்கு அதிரடியாக கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அதற்கு பிறகு கமல்ஹாசன் இது நான் எடுத்த முடிவு அல்ல என்று அடுத்த வாரமே விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார். முதல் வாரத்தில் இந்த முடிவை சேனல் தரப்பில் எடுக்கவில்லை என்று இருந்தால் நான் வெளியே போய் இருப்பேன் என்று சொன்ன கமல்ஹாசன் அடுத்த வாரம் போட்டியாளர்கள் வைத்த கம்ப்ளைன்ட்களால் தான் சேனல் இந்த முடிவை எடுத்தது என்று போட்டியாளர்கள் வாயாலேயே சொல்ல வைத்திருந்தார்.
அதை தொடர்ந்து நிக்சனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் மணி மற்றும் தினேஷ் பேசியதை திரித்து பேசி இன்னொரு அர்த்தத்தில் அவர்களையே குழப்பி விட்டது போன்ற செயல்களும் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே கமல்ஹாசன் மாயாவிற்கு அதிகமாக சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார், மாயாவை எதிர்ப்பவர்களை கமல்ஹாசன் கேள்விகளால் துளைத்து எடுக்கிறார் என்றும் பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இதற்கு பலமுறை கமல்ஹாசன் நான் யாரை சார்ந்தும் அல்ல, நான் யாருடைய கூட்டணியும் கிடையாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் கடந்த வாரத்தில் கமல்ஹாசன் செய்த செயல் அதிகமாக விமர்சிக்கப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் இந்த வாரம் கலை நிகழ்ச்சிகளில் நன்றாக பெர்பார்மன்ஸ் செய்த அர்ச்சனா மற்றும் தினேஷை பாராட்ட இருக்கிறார் என்றும், அதுபோல மாயாவிற்கு எதிராக குறும்படம் ஒளிபரப்பாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அதாவது நிக்சன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும்போது மாயா விஜய் வர்மாவிடம் நிக்சனுக்கு எதிராக டான்ஸ் ஆடாதே என்று தடுத்து நிறுத்தி இருக்கிறார். அதை இன்று ஆதாரத்தோடு கமல்ஹாசன் நிரூபித்து விட்டு நான் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை விளக்கி பேச இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இன்று என்ன நடக்கப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications