கொளுத்தி போட்ட பிக்பாஸ்.. ஒரே நாளில் மொத்த ரகசியத்தை போட்டு உடைத்த கூல் சுரேஷ்.. ட்ரெண்டாகும் மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது.

இதில் 18 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஒரே நாளில் இணையத்தில் மீம்ஸ்கள் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Bigg Boss Tamil Season 7 trending Memes Cool Suresh

அதுவும் இந்த சீசனில் கூல் சுரேஷ் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டெண்டுகளை வாரி குவித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இணையத்தில் வெளியே வைரல் ஆகி வரும் மீம்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். காரணம் இந்த சீசன் இதுவரைக்கும் இல்லாத வகையில் இரண்டு வீடு என்ற கான்செப்ட் தொடங்கப்பட்டிருப்பது தான். இதனாலேயே இந்த முறை என்ன மாதிரி நிகழ்ச்சி போகப் போகிறது என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

Bigg Boss Tamil Season 7 trending Memes Cool Suresh

அந்த வகையில் பல மாதங்களாக பிக் பாஸ்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று மகிழ்ச்சி கிடைத்தது. வழக்கம் போல பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று மாலை 6:00 மணிக்கு தொடங்கப்பட்டதும் போட்டியாளர்கள் வரிசையாக அறிமுகம் ஆகி இருந்தனர். அதுவும் இந்த முறை அதிகமான இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இது இளைஞர்களுக்கு மேலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும்.

அதே நேரத்தில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் போட்டியாளர்களை தான் பார்த்து பார்த்து செலக்ட் செய்து இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் கூல் சுரேஷ், சீரியல் நடிகை ரவீனா, மணிச்சந்திரா, பிரதீப் போன்ற பலர் நேற்றைய முதல் நாளிலிருந்து தங்களுடைய ஆட்டத்தை தொடங்கி விட்டனர். அறிமுகமாகி பிக் பாஸ் வீட்டிற்குள் போனதுமே பிரதீப் மற்றும் வினுஷா தேவி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

Bigg Boss Tamil Season 7 trending Memes Cool Suresh

அதுபோல பிக் பாஸ் அறிமுக மேடையில் நடிகர் கமல், கூல் சுரேஷ்காக ஒரு சுரேஷ் என்று பெயர் பதிக்கப்பட்டு இருந்த செயின் ஒன்றை கொடுத்து கூல் என்ற பெயர் நீங்கள் உங்களுக்காக வைத்துக் கொண்டது. சுரேஷ் என்ற பெயரை இனி ரசிகர்களுக்கு நீங்கள் காட்டுங்கள் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்த நிலையில் அது குறித்து பிக் பாஸ் வீட்டிற்குள் போனதும் கேமரா முன்பு கூல் சுரேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார். அப்போது நீங்க நினைக்கிற மாதிரி பிக் பாஸ் தந்தது தங்க செயின் எல்லாம் கிடையாது. பித்தள செயின் தான் என்று அவர் சொல்லி இருப்பது தற்போது மீம்ஸாக வலம் வருகிறது.

அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கூல் சுரேஷ் இளைஞர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தை சொல்லி உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க அதுவும் தற்போது தலைவன் வேற ரகம் பார்த்து உசாரு என்று ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு மீம்ஸாக வெளியாகி இருக்கிறது.

Bigg Boss Tamil Season 7 trending Memes Cool Suresh

அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் என்ட்ரி ஆகி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் போட்டியாளர்களை இரண்டு வீடாக வீட்டில் பிரித்து விட்டதால் "இது என்ன ஆடி மாசமா? இப்படி 24 மணி நேரம் கூட ஆகாம அதுக்குள்ள பிரிச்சு வச்சிருக்கீங்களே...?" என்றும் சில மீம்ஸ் வைரலாகி வருகிறது.

அதுபோல இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் பாவா செல்லதுரை கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் எலிமினேஷன் லிஸ்டிலும் இருக்கிறார். அதுபோல இந்த வார தலைவரை கவராதவர் என்ற வரிசையிலும் பாவா செல்லதுரை இருக்கிறார். அதனால் அவருடைய மைண்ட் வாய்ஸ் என்று ஒரு மீம்ஸ் வைரல் ஆகிறது. அதில் " எதோ சின்ன வீடுன்னு சொல்லி முறை வாசல் பண்ண சொல்றாங்க சார். பிக்பாஸ் வீட்டுக்கு ஏதோ தெரியாம வந்துட்டேன் சார். என்ன விட்டுருங்க சார். நான் ஓடிவிடுவேன்..." என்று அவர் சொல்வது போன்று ஒரு மீம்ஸ் கிரியேட் செய்திருக்கின்றனர்.

அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் போன சீசனில் ஜி பி முத்து ஆதாம் ஏவாள் என்றால் யார் என்று தெரியாது தெரியாமல் சொன்னது போல நடிகர் கூல் சுரேஷ் கன்ஸ்சக்சன் ரூம் என்றால் என்னவென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அது குறித்தும் "கூல் சுரேஷ் உங்க கிட்ட மாட்டல பிக் பாஸ், நீங்கதான் அவங்க கிட்ட மாட்டிட்டு இருக்கீங்க" என்றும் ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+