கமல் சார்கிட்ட குறும்படம் கேட்கப் போறேன்.. ஆவேசமான வனிதா.. அதனால்தான் அந்த வீடியோ வெளியிட்டாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை வனிதா தன்னுடைய மகளுக்கு ஆதரவாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தன்னுடைய மகள் மற்றும் விசித்திரா இடையே ஏற்பட்ட கருத்து மோதல்களுக்கு தன்னுடைய மகளுக்கு ஆதரவாக நடிகர் கமலிடம் தான் குறும்படம் கேட்கப் போகிறேன் என்று வனிதா பேசியிருக்கிறார்.

bigg boss tamil season 7: Vanita is furious I am going to listen to Kamals short film

அத்தோடு வனிதா தன்னுடைய மகள் சிறுவயதில் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். அது எதற்காக என்று அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புபடியே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை விசித்திராவிற்கும் ஜோதிகாவிற்கும் இடையே படிப்பு விஷயத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. அப்போது நடிகை விசித்திரா கண்டிப்பாக அடிப்படை கல்வியை கற்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு ஜோவிகா என்னால் படிக்க முடியவில்லை. அதனால் தான் நான் படிப்பை விட்டு விட்டேன் என்று கூறியிருந்தார்.

அதோடு அந்த வாக்குவாதத்தில் ஜோவிதா விசித்திராவை மரியாதை குறைவாக பேசி இருந்தார் என்று அதிகமான ரசிகர்கள் அவரை திட்டியும் வருகின்றனர். அதுபோல இன்னும் ஒரு சிலர் ஜோவிகா சொல்றது சரி, விசித்ரா போன்றோர் குழந்தைகளிடம் படிப்பு விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வதால் தான் பல குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றெல்லாம் கருத்துக்கள் இணையத்தில் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் வந்து ரசிகர்களிடம் பேசி இருக்கிறார். அப்போது நான் கமல் சார் கிட்ட குறும்படம் கேட்க போறேன். ஏனென்றால் ஜோவிகா அப்படி யாரிடமும் மரியாதை இல்லாமல் பேச மாட்டாங்க. எங்க குடும்பத்தில் யாருமே அப்படி பேச மாட்டோம். பிரண்ட்ஸ்ங்க கிட்ட, எங்கர்ஸ் கிட்ட அக்கா அண்ணன் என்று சொல்றது அவளுக்கு விருப்பம் கிடையாது.

தன்னோட வயசுல மூத்தவங்க சக கண்டஸ்டண்ட் எல்லாரும் இவளை உனக்கு ஒன்னும் தெரியாது என்று சொல்வதை அவ விரும்ப மாட்டா. ஜோவிகாவே குறை சொல்றவங்க விசித்ரா கிட்ட ஜோவிகா பேசியதை எபிசோடில் போய் போட்டு பாருங்க. போட்டு பார்த்துட்டு வந்து கமெண்ட் போடுங்க. அதில் "உங்கள" நான் என்று கூப்பிடறது எனக்கு பிரச்சனை கிடையாது என்று தான் சொல்லி இருப்பார்.

bigg boss tamil season 7: Vanita is furious I am going to listen to Kamals short film

அதில் நீ என்று சொன்னது விசித்திராவை கிடையாது. நீங்க எபிசோட்டில் போய் பார்த்துட்டு சொல்லுங்க நான் அடுத்த வாரம் இது பற்றி லைவில் பேசுகிறேன் அப்போ என்கிட்ட கமெண்டில் சொல்லுங்க. நான் அந்த வீடியோவை ரெக்கார்ட் பண்ணி போட்டு விடுறேன்.
நான் கமல் சார் கிட்ட குறும்படம் கேட்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன்.

அது உங்க கிட்ட போட்டு காட்டுவேன் என்று என்று கோபமாக பேசி இருக்கிறார். அதோடு அந்த வீடியோவில் ஜோதிகாவிற்கு எழுத படிக்க தெரியும். தெரியாமல் எல்லாம் அவள் இல்லை. அதனால் தான் அவளுடைய சின்ன வயது வீடியோ ஒன்று கூட நான் என்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறேன். அவளுக்கு படிக்க தெரியாது என்று சொல்றவங்க அந்த வீடியோவை பார்த்துட்டு பேசுங்க என்று கூறியிருக்கிறார். தற்போது இதற்கு அதிகமானோர் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+