பிக் பாஸ் 7 லைவ்: விசித்ராவின் குடும்பம் வந்ததும் நடந்த பஞ்சாயத்து.. அடப்பாவமே இதுவும் நடந்திருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று 83வது நாள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஃப்ரீஸ் டாஸ்குக்காக விசித்திராவின் குடும்பம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறது.

விசித்திராவிற்காக அவருடைய கணவர் மற்றும் மூன்று குழந்தைகளும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.

இப்போது விசித்ராவின் குழந்தைகள் விசித்திராவிடம் சில ரகசியங்களை உடைத்திருக்கின்றனர். அதுபோல விசித்ராவின் கணவர் உள்ளே பஞ்சாயத்தை எழுப்பி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Bigg Boss Tamil Season 7 Vichithira family has entered for the freeze task

அந்த வகையில் இப்போது விசித்ராவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். ரசிகர்கள் பலரும் விசித்திராவின் குடும்பத்தை பார்ப்பதற்காக ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில் இன்று அந்த சந்தர்ப்பம் நடைபெற்று இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் விசித்ராவின் கணவர் வந்ததுமே விசித்திரா தன்னுடைய மகன்கள் வரவில்லையா என்று கேட்க அதற்கு அவர்களுக்கு எக்ஸாம் இருக்கு அதனால தான் வரல என்று சொல்ல அதைக் கேட்டு விசித்திரா ரொம்பவே உடைந்து போயிருக்கிறார்.

அந்த நேரத்தில் பிக் பாஸ் விசித்திராவை கன்ஃபெஷன் ரூமிற்கு கூப்பிட்டு இருந்தது. அப்போது விசித்திராவிடம் என்ன விசித்திரா நீங்க கவலையா இருக்கீங்க என்று கேட்க அதற்கு விசித்திரா நான் என்னுடைய பையன்களை ரொம்ப எதிர்பார்த்தேன் என்று சொல்ல அதற்கு பிக் பாஸ் நீங்க டைட்டில ஜெயிச்சுட்டு உங்க பையன்கள போய் பாருங்க என்று சொல்லி விசித்திராவை சமாதானப்படுத்தி இருந்தார்.

Bigg Boss Tamil Season 7 Vichithira family has entered for the freeze task

பிறகு விசித்திரா வெளிய வந்து தான் கொண்டு வந்த டாஸ்க் லெட்டரை படிக்க போகும் போது அங்கு தன்னுடைய மகன்கள் இருப்பதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்திருந்தார். அதுபோல விசித்திராவின் கணவர் ஷாஜி என்னுடைய எனிமி ஸ்மால் பாஸிடம் நான் பேசணும் என்று கலகலப்பாக பேசியிருந்தார். அதுபோல விசித்திராவின் மகன் ரோஷன் விசித்ராவிற்கு சில அட்வைஸ் கொடுத்து இருந்தார்.

அதாவது திங்கள் கிழமை ஆனா சண்டை போடுறா, அதனால நான் போய் எல்லார்கிட்டயும் ஓட்டு கேட்க வேண்டியதா இருக்கு. சண்டை போடணும்னா நாமினேஷன் அப்புறம் போடுமா என்று அட்வைஸ் கொடுத்திருந்தார். அதுபோல எல்லோரும் உங்களை மம்மின்னு கூப்பிடும் போது எனக்கு ஜலீஸாக இருக்கு என்று சொல்லி இருந்தார். அதுபோல விசித்திராவின் குடும்பத்தினர் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருடன் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு இருந்தனர்.

Bigg Boss Tamil Season 7 Vichithira family has entered for the freeze task

அதற்குப் பிறகு விசித்திராவும் அவருடைய கணவரும் பேசிக் கொண்டிருக்கும்போது மாயா விசித்ராவின் கணவரிடம் வந்து நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தா என்னை மன்னிச்சிருங்க என்று மன்னிப்பு கேட்க அதற்கு விசித்ராவின் கணவர் அதான் நானும் பார்த்தேன்... நீங்க அதிகமா மன்னிப்பு கேக்குறீங்க.. அன்னைக்கு கூட அர்ச்சனா அம்மா அப்பா காலில் சாஸ்டாங்கமா விழுந்துட்டீங்களே என்று கிண்டல் செய்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+