இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இல்ல.. ஒரு எவிக்ஷன் தான்.. அதுவும் நீங்க வின்னர்ன்னு நினைச்சவங்க தான்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் நேற்று வரைக்கும் இரண்டு பேர் இந்த வாரம் எவிக்ஷனாக போகிறார்கள் என்று தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இப்போது நாளை வெளியாக போகும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
அதாவது நேற்று இந்த வாரத்தில் அன் அபிசியல் ஓட்டிங் லிஸ்ட்ல் மாயா மற்றும் விஜய் வர்மா இருவரும் கடைசி இடத்தில் இருக்கின்றனர். ஆனால் இதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெளியேற்றம் நடைபெற்று இருக்கிறது.
அதாவது இந்த வாரத்தில் விசித்திரா தான் எவிக்டாகி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில் மிட் நைட் எவிக்சனாக விஜய் வர்மா வெளியேற்ற படுவார் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வழக்கம் போல தொடங்கிவிடும் ஆனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு சிலர் இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த சீசன் முடிந்து விடுமே என்று வருத்தத்தோடு உள்ளே பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் நேற்று பூர்ணிமா பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சம் பணத்தோடு வெளியேறிய பிறகு மீதம் உள்ள ஏழு போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதில் விஷ்ணு நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும் டிக்கெட் 2 பினாலே டாஸ்க்கில் ஜெயித்து இருப்பதால் அவர் தவிர மீதமுள்ள ஆறு பேரும் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷனில் இருக்கின்றனர்.
அதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் தற்போது வரைக்கும் வெளியான அன் அபிஷியல் வோட்டிங் லிஸ்டில் மாயா மற்றும் விஜய் வர்மா தான் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல பிக்பாஸ் இந்த முறையும் மாயாவை சேவ் செய்துவிட்டு இதற்கு சம்பந்தமே இல்லாமல் அதிக வாக்குகளில் இருந்த விசித்திராவை இந்த வாரம் வெளியே தூக்கி இருப்பதாக தகவல்கள் வெளியேறி இருக்கிறது.
இது விசித்திராவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விசித்ரா தான் இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில் இது அவர்களுக்கு ஏமாற்றம்தான் அதனால் இணையத்தில் அதிகமானோர் பிக் பாஸை திட்டி வழக்கம் போல கருத்து வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் கடந்த சில நாட்களாக விசித்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து கொண்ட விதம் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது விசித்திராவிற்க்கும் தினேஷுக்கும் ஆரம்பத்திலிருந்து முட்டல் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதிலும் கடந்த வாரத்தில் விசித்திரா தினேஷ் மீது அதிகப்படியான கோபத்தில் அவரை திட்டிக் கொண்டே இருந்தார். அதிலும் தினேஷ் உடைய பர்சனல் குறித்து கேமரா முன்பு பேசி இருந்ததை ரசிகர்கள் சுட்டிக்காட்டி திட்டி வந்த நிலையில் அது குறித்து கமலும் அட்வைஸ் செய்திருந்தார்.
அதே நேரத்தில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கூட கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் யார் பணப்பெட்டியை எடுப்பதை தவற விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு எல்லா போட்டியாளர்களும் விசித்திரா பெயரை சொல்லி இருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications