பிக் பாஸ் 7: பீரியட்ஸ் நேரத்தில் நீ அந்த மாதிரி பண்ணுனியே..! அர்ச்சனாவை பற்றி தரக்குறைவாக பேசிய விசித்திரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி விசித்திரா பேசி இருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.

பீரியட்ஸ் நேரத்தில் கேமரா முன்னாடி அர்ச்சனா பேசி அனுதாபம் தேடினார் என விசித்திரா குற்றம் சாட்டி இருக்கிறார்.

அதே நேரத்தில் அர்ச்சனாவை பற்றி பேசிய விசித்திராவிடம் தினேஷ் சில கேள்விகளை கேட்டிருக்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Bigg Boss Tamil Season 7 Vichithra talked about Archana private affairs

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் 5 ஸ்டாருக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் 5 ஸ்டாரை பெற வேண்டும் என்பதற்காக தான் எவ்வளவு சிறந்தவர் என்பதை சொல்லி போராடலாம். அல்லது மற்றவர்களின் குறையை சொல்லியும் போராடலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது ஒவ்வொருவரும் தாங்கள் தான் இந்த வீட்டில் பெஸ்ட் என்று கூறிக் கொண்டிருந்தனர். அப்போது அர்ச்சனா, தினேஷ் முதலியோர் விசித்திராவிடம் நீங்கள் கேமரா முன்னாடி நான் நல்லவர் என்பதை காட்டிக் கொள்வதற்காக முயற்சி செய்கிறீர்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கண்டமேனிக்கு திட்டி விடுகிறீர்கள்.

அவர்களை பற்றி குறை மேலே குறை சொல்கிறீர்கள். பிறகு மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகுறிங்க. அதுவும் பல பேரை கூப்பிட்டு வைத்து நான் நல்லவள் என்று சொல்ல நிரூபிப்பதற்காக நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல அதற்கு கோபமான விசித்திரா நான் மட்டும்தான் கேமரா முன்னாடி நடிக்கிறேனா? நீங்கள் எதுவும் செய்யவில்லையா? அன்னைக்கு அர்ச்சனா பீரியட்ஸ் நேரத்தில் எதற்கு கேமரா முன்னாடி போய் பேசிக்கிட்டு இருந்தா?

அப்போ நீ அனுதாபம் தேடினியா என்று கேள்வி கேட்க, அதற்கு அர்ச்சனா நீங்க இவ்வளவு சீப்பாக பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. இதுவரைக்கும் உங்களை நான் மேம் என்ற வார்த்தையை விட்டு வேறு ஒரு வார்த்தை சொல்லி பேசினது கிடையாது. உங்களிடம் எந்த இடத்திலும் நான் நடித்தது கிடையாது. ஆனால் நீங்கள் இவ்வளவு சீப்பாக என்னுடைய வலியை பற்றி நான் பேசினதை பேசி விட்டீர்கள் என்று அர்ச்சனா புலம்பினார்.

Bigg Boss Tamil Season 7 Vichithra talked about Archana private affairs

அதற்கு தினேஷ், அர்ச்சனா நடிக்கிறார் என்றால் அப்போ நீங்க எதற்கு அவரிடம் அப்போது மாத்திரை வேண்டுமா என்று அதே கேமரா முன்னாடி நின்று கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அப்போ அர்ச்சனா நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சி நீங்களும் நடிச்சீங்களா? என்று கேள்வி கேட்டிருந்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் அர்ச்சனாவிற்கு ஆதரவாக மாயா குரூப்பிடம் சண்டையிட்ட அதே விசித்திரா இப்போது அர்ச்சனாவின் அந்தரங்க விஷயங்களை பற்றி விமர்சிப்பது குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+