பிக் பாஸ் 7: விசித்ராவா இப்படி? பிக் பாஸ் மீது கோபத்தில் விட்ட வார்த்தை.. மணி கொடுத்த பதிலடி.. அடுத்த பிரச்சனை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நேற்று நடைபெற்றது.
அதில் போட்டியாளர்கள் சிலருக்கு ஜோடி டான்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அப்போது விசித்ரா தனக்கு கொடுத்த பாடல் குறித்து பிக் பாஸை விமர்சித்து பேசி இருந்த நிலையில் அதற்கு மணி பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் விஷ்ணு கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று பிக் பாஸ் டுவிஸ்ட் வைத்திருந்தார்.
அப்போது அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா இருவரையும் எல்லா போட்டியாளர்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி இருந்தனர். அதிலும் குறிப்பாக விசித்திரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தனர்.
அதனால் எல்லா போட்டியாளர்களும் தினேஷ் மற்றும் அர்ச்சனாவை பாராட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து எதிர்பார்க்காத வகையில் முதல் மிட் வீக் பிக் எவிக்ஷன் நடைபெற்றது. அதில் நாமினேட் செய்யப்பட்ட தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன் ஆகியோர் வெளியே வந்து டாஸ்க் ஒன்றில் கலந்து கொண்டனர்.
அதில் தங்களுடைய புகைப்படம் ஒட்டப்பட்ட அட்டை கொடுக்கப்பட்டிருக்கும் அதை சரியாக சேர்த்து வைக்கும் போது யாருடைய புகைப்படம் சரியாக பொருந்தவில்லையோ அவர் வெளியேற்றம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி அனன்யா வெளியேற்றப்பட்டு இருந்தார். அதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் விசித்ரா மற்றும் பூர்ணிமா இருவருக்கும் கந்தசாமி திரைப்படத்தில் இடம் பெற்ற என் பேரும் மீனாக்குமாரி என்ற பாடலுக்கு டான்ஸ் ஆட கொடுக்கப்பட்டிருந்தது.
அதில் பூர்ணிமா பயங்கரமாக கிளாமராக டான்ஸ் ஆடி இருந்தார். அதுபோல விசித்திராவும் தன்னால் முடிந்த வரை அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அந்த பாடல் முடிந்த பிறகு பலரும் பூர்ணிமாவை பாராட்டி இருந்தனர். அப்போது விசித்ரா மணி இடம் உட்கார்ந்து புலம்பி கொண்டிருந்தார். அதில் இந்த பாட்டு ஏன் எனக்கு போட்டாங்கன்னு தெரியல.
இது எனக்கு சரியா இருக்குமா? வெளியில் எப்படி தெரியும்? ஏன் இப்படி பண்ணுவாங்க என்றெல்லாம் புலம்பி கொண்டு இருந்தார். அதாவது நான் இப்போது நல்ல ஒரு இமேஜை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த நேரத்தில் கூட எனக்கு மீண்டும் கவர்ச்சி பாடல்களை தந்திருப்பது சரி இல்லை என்று பிக் பாஸை குறை சொல்லும் வகையில் விசித்திரா பேசிக் கொண்டிருந்தார்.
அதற்கு மணி நீங்கள் டான்ஸ் ஆடியது சரிதான். இது ஒரு கேம் ஷோ மாற்றத்தை பற்றி நீங்கள் யோசிக்காதீர்கள். இது வெளியே தப்பாக தெரியாது. நீங்கள் ஒரு நடிகை இது ஒரு டான்ஸ் மாரத்தான் டாஸ்காக தான் அவர்கள் இந்த மாதிரி பாட்டு செலக்ட் பண்ணி அனுப்புறாங்க. இது வெளியில் தப்பா எதுவும் தெரியாது. நீங்களும் அந்த மாதிரி ஓபன் ஆகவும் டான்ஸ் ஆடல. கரெக்டா சரியான அளவிற்கு தான் என்ன வேணுமோ அதை பண்ணி இருக்கீங்க.

பார்ப்பதற்கு நன்றாக இருந்தது நாங்க எல்லாரும் என்ஜாய் பண்ணி பார்த்துக் கொண்டிருந்தோம். உங்களை நம்பித்தான் இந்த பாட்டு கொடுத்திருக்காங்க. நீங்க இதைப் பற்றி தேவையில்லாம யோசிக்காதீங்க என்று ஆறுதல் கூறி இருந்தார். இது இப்போது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications