ஜோவிகா பற்றி விசித்ரா சொன்ன வார்த்தை.. ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்ட வனிதா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான ஜோவிகா சக போட்டியாளராக விசித்திராவோடு கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தார்.
எல்லோருக்கும் அடிப்படை கல்வி முக்கியம் என்று விசித்திரா சொன்னதற்கு ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை. அதனால் நான் படிக்கவில்லை என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இந்த விவாதத்திற்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது. அதில் ஒரு ரசிகரின் கமெண்டை நடிகை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து இந்த சீசனிலும் சண்டை சச்சரவுகள் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் இந்த சீசனில் சண்டைக்காரராக பிரதீப் தன்னை காட்டிக்கொண்டு சக போட்டியாளர்களிடம் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய நாளில் ஜோவிகா மற்றும் விசித்ராவிற்கு இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகும் போது ஜோவிகா தான் ஒன்பதாம் வகுப்பு வரைக்கும்தான் படித்திருக்கிறேன். அதற்கு பிறகு என்னால் படிக்க முடியவில்லை. நானும் முயற்சி செய்தேன் தன்னுடைய அம்மாவும் பல ஸ்கூல் மாற்றி பார்த்தார்கள். ஆனால் படிப்பு எனக்கு வரவில்லை. அதனால் அதை விட்டுவிட்டு என்னுடைய திறமையை நோக்கி நான் இப்போது போய்க் கொண்டிருக்கிறேன்.
எனக்கு என்ன மாதிரி வருகிறதோ அதை நான் செய்யப் போகிறேன் என்று பேசியிருந்தார். அது குறித்து நேற்றைய நாளில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிக் கொண்டிருக்கும் போது நடிகை விசித்திரா எல்லோரும் அடிப்படை கல்விகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கட்டத்தில் கோபமான ஜோவிகா நான் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறேன். என்னால் படிக்க முடியவில்லை நான் அதனால் படிப்பை விட்டு விட்டு எனக்கு இருக்கும் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் படிப்பு மட்டும்தான் முக்கியம் என்று சொல்வது தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இப்படியாக பேசிக் கொண்டிருக்கும்போது இருந்த விவாதங்களும் அந்த வீடியோக்களும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. எப்படி பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மற்றும் ஜூலி இடையே கருத்து மோதல்கள் பரபரப்பை ஏற்படுத்தியதோ அது போலத்தான் இப்போது விசித்திரா மற்றும் ஜோவிகா சண்டையும் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதில் அதிகமானோர் விசித்ரா சொன்னதில் தப்பு இல்லை இளம்தலை முறையினர் அடிப்படை கல்வியை கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் பிறகு அவர்கள் தான் கஷ்டப்பட போகிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலர் ஜோவிகாவுக்கு ஆதரவாகவும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். படிப்பு வரவில்லை என்றால் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது. அவர்களுக்கு எது வருகிறதோ அதை செய்ய வைக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஜோவிகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட கருத்தை ஜோவிகாவின் அம்மாவான நடிகை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் ஜோவிகாவிற்கு இருக்கிற மெச்சூரிட்டி மற்றும் நாலெட்ஜ் கூட சைக்காலஜி படிச்சு பட்டம் வாங்குன விசித்திராக்கு இல்லைன்னு இப்போ நிரூபணமாகி இருக்கிறது. விசித்ரா மாதிரி பேசுற சில பேரால எவ்வளவு குழந்தைகள் லைப்பே வீணாகிறது தெரியுமா? படிப்பு முக்கியம் இல்லன்னு எப்போ புரியும் எல்லோருக்கும்? விசித்திரா நீங்க தமிழ் எழுதுடி பாக்கலாம் என்று சொன்னதற்கு உங்களுக்கு சனிக்கிழமை எபிசோடில் விடை கிடைக்கும்.
தமிழ் தெரியலன்னா என்ன? ஒருத்தருக்கு வரலன்னா விட்டுரனும் ஜோவிற்க்கு நிறைய டேலண்ட் இருக்கு. அதை என்கரேஜ் பண்ணுங்க. கமல் சார் இதுகுறித்து விசித்ராவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று அந்த ரசிகர் கமலையும் டேக் செய்து அந்த கமெண்டில் வைத்திருக்கிறார். மேலும் அதைத் தொடர்ந்து விசித்திரா கேம் விளையாட வரல. அதனால அவங்கள பிக் பாஸ் வீட்டில் இருந்து அவங்களுக்கு ரெக்கார்ட் கொடுத்து வெளியேற்றிடுங்க.
அதுபோல அம்மாவோட கண்டிப்பு எல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் தேவை இல்லை என்று நீண்ட ஒரு கமாண்டை ரசிகர் ஒருவர் போட்டு இருக்க, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்த நடிகை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு சில ரசிகர் லாஸ்லியாவுக்கு போய் இவங்க அட்வைஸ் பண்ணுனாங்க. இவங்க பண்ணுனா அம்மா பீலிங்ல பண்றாங்க. இதே இவங்க பொண்ணுக்கு வேறொருத்தங்க அட்வைஸ் பண்ணா மட்டும் தப்பா? என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதுபோல இன்னும் ஒரு சில ரசிகர்கள் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா பேசிய வார்த்தைகள் உண்மை என்றும் வனிதா தன்னுடைய மகளை தைரியமாக வளர்த்திருக்கிறார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியாக தற்போது இணையத்தில் இது குறித்த விவாதம் அதிகமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications