பிக் பாஸ் 7: கலவரமான வீடு.. அதிரடியாக பிக் பாஸால் வெளியேற்றப்பட்ட விஜய் சர்மா? இது தான் காரணமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று ஆக்சிஜன் எமர்ஜென்சி என்ற கேமை போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல சில போட்டியாளர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து விஜய் சர்மா வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே விஜய் சர்மா பிரதீப் தன் மீது காலால் இடித்துவிட்டு சென்றதற்கு நான் அடித்து முகரையை உடைத்து விடுவேன். என்னுடைய நண்பர்கள் வெளியே பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் இவர் வெளியே போனால் தப்ப முடியாது என்று மிரட்டுகிற தோணியில் ஏற்கனவே பேசியிருந்தால் இதனாலேயே இவருக்கு கமல் ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்திருந்தார்.
இதனால் கடந்த வாரத்தில் விஜய் சர்மா தன்னுடைய விளையாட்டை குறைத்து இருந்தார். இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டதாக சில தகவல்கள் பரவி வருகிறது. அதாவது இன்று ஆக்சிஜன் எமர்ஜென்சி என்ற கேம் தொடங்கி இருக்கின்றனர். அதில் சின்ன வீட்டில் இருப்பவர்களும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களும் சேர்ந்து விளையாடக் கூடியது.
எந்த போட்டியாளர்கள் அதிக சிலிண்டர்கள் ராப் பண்ணி வைத்து பாதுகாக்கிறார்களோ? அந்த வீடு வெற்றி பெற்றது என்று கூறப்பட்டது. அது போலவே டாஸ்க் தொடங்கப்பட்டிருந்த நிலையில் எல்லோரும் கையில் சிலிண்டர்களை வைத்து பாதுகாக்கும் வண்ணம் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த கண்ணாடி கதவை நிக்சன் வேகமாக முட்ட அது உடைந்து சிதறி இருந்தது. இப்படியாக முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் விஷ்ணு மற்றும் விஜய் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு இருந்தது. அப்போது விஷ்ணுவை விஜய் சர்மா அடிப்பது போன்று நெருங்கி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஆக இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் ஏற்கனவே ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்த பிறகும் விஜய் சர்மா மீண்டும் கலவரத்தில் இடுபடுகிறார் என்று பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று சில தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது இன்னும் 24 மணி நேர எபிசோடில் ஒளிபரப்பாகவில்லை. இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications