பிரதீப்பை அப்படி தாக்க காரணமே அவர்தான்.. எல்லாமே தெரியும்.. மறைக்கப்பட்ட ரகசியத்தை உளறிய விஜய் வர்மா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது போட்டியாளராக விஜய் வர்மா கடந்த வாரம் எலிமினேஷன் ஆனார்.
அவர் வெளியே வந்த பிறகு உள்ளே நடந்த பல விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். அதோடு தான் பிரதீப்பை தாக்கியதற்கு என்ன காரணம் என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இத்தனை விஷயங்கள் உள்ளே நடந்ததா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நான்காவது வாரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் அறிமுகமான நிலையில் இப்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இன்னும் ஐந்து போட்டியாளர்கள் வரும் வாரத்தில் வைல்ட் கார்டாக களம் இறங்குவார்கள் என்று பிக் பாஸ் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் வர்மா எலிமினேஷன் ஆகி வெளியே வந்தார். இவருக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்தாலும் உள்ளே இவர் ஆக்ரோஷமாக விளையாடினார் என்று பலர் இவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று பலர் கூறி வந்தனர். ஆரம்பத்தில் பிரதீப் உடன் வாய் தகராறு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து இவருக்கும் விஷ்ணுவுக்கும் பல இடங்களில் சண்டை ஏற்பட்டு கொண்டே இருந்தது. அதே நேரத்தில் சிலிண்டர் டாஸ்க்கில் பிரதீப்பை விஜய் வர்மா பகீங்கரமாக தூக்கி அடித்தது போன்ற காட்சிகள் வெளியாகி இணையத்தை அதிர வைத்திருந்ததுய டாஸ்க்கில் இப்படி எல்லாமா விளையாடுவார்கள் ஏதாவது இருந்தால் என்ன ஆயிருக்கும் என்று பலர் கதறி கமெண்ட் கொடுத்து வந்தனர்.
அந்த நேரத்தில் அடி வாங்கிய பிரதீப் அதை லேசாக எடுத்துக் கொண்டதாலேயே அது குறித்து கமல் பிரதீப்பை பாராட்டவும் செய்திருந்தார். இந்த நிலையில் வெளியே வந்த விஜய் வர்மா முதல் முறையாக பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அப்போ அந்த ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க் நடைபெறும் போது என்னுடைய முழு கவனமும் ஆக்சிஜன் சிலிண்டரை எடுக்க வேண்டும் என்பதுதான்.
அதை தவிர மற்றவர்களை நான் தடுக்க நினைக்கவே இல்லை. அதை பற்றி நாங்கள் பேசவும் கூடாது. ஆனால் எனக்கு ஏற்கனவே கழுத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் ஆபரேஷன் செய்து விட்டு நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தேன். அது பிரதீப்புக்கு நல்லாவே தெரியும். எனக்கு பிரதீப் தான் பலமுறை ஐஸ் எடுத்துட்டு வந்து கொடுத்து இருக்கிறார்.

எல்லாம் தெரிந்தும் அந்த டாஸ்க்கில் அவர் என் கழுத்தைப் பிடித்து தொங்கியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமல் தான் நானும் நடந்து கொண்டேன். என்னை விடுவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அந்த மாதிரி நடந்து இருக்கிறேன். அதுபோல அவர் என் கழுத்தை இறுக்கிப்பிடித்து என்னை அசைய விடாமல் தடுத்து வைத்திருந்த போது என்னால் ஐந்து நொடிக்கு மூச்சு விட முடியாமல் போனது.
அதனால் தான் அவர் பிடியில் இருந்து விடுவிப்பதற்காக நான் அதை செய்தேனே தவிர நான் வேண்டும் என்று அப்படி செய்யவில்லை என்று அந்த பேட்டியில் விஜய் வர்மா பேசியிருக்கிறார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications