பிக் பாஸ் 7: கமலை பொசுக்குன்னு அசிங்கப்படுத்திய விக்ரம் அப்பா.. இதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருந்தபோது விக்ரம் உடைய அப்பா மற்றும் அம்மா உள்ளே வந்திருந்தனர்.

மாயாவிடம் நடிகர் கமல்ஹாசனை அசிங்கப்படுத்தும் விதமாக பேசி இருந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நீ சொல்லும் பொய்களை கமல் சார் வேண்டும் என்றால் நம்பலாம், நாங்கள் நம்ப மாட்டோம் என்றும் மேலும் சில வார்த்தைகளையும் விக்ரம் உடைய அப்பா பேசியிருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அது பற்றி பார்ப்போம்.

bigg boss tamil season 7 Vikrams father has spoken some more words saying that Kamal

அந்த வகையில் அதிகமான ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த உறவினர்களின் வருகை நிகழ்ச்சி பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்க தொடங்கி இருக்கிறது. நேற்று காலையில் பிக் பாஸ் நீங்கள் ஆர்வத்தோடு காத்திருந்த டாஸ்க் தொடங்கப் போகிறது என்று சொன்னதுமே எல்லோரும் டக் என்று புரிந்து கொண்டார்கள். இன்று ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்க போகிறது, நம்ம குடும்பம் வரப்போறாங்க என்று எல்லோரும் சந்தோஷமாக இருந்தனர்.

அப்போது மேலும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். அதாவது இந்த சீசனில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒருவர் இன்று வரலாம், மற்றொருவர் நாளை வரலாம் இல்லை மொத்தமாகவும் ஒரே நாளிலும் வருவார்கள் என்று சொல்ல அதை கேட்டு போட்டியாளர்கள் சந்தோஷப்பட்டனர். அதைத் தொடர்ந்து பூர்ணிமாவின் பெற்றோர் வந்திருந்தனர்.

அவர்களை அடுத்ததாக அர்ச்சனாவின் பெற்றோர் வந்திருந்தனர். அவர்களை தொடர்ந்து சரவண விக்ரமின் பெற்றோரும் வந்திருந்தனர். எல்லோரும் ஆரம்பத்தில் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் விக்ரமுடைய அப்பா யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தார்.

bigg boss tamil season 7 Vikrams father has spoken some more words saying that Kamal

ஏற்கனவே வீட்டிற்குள் வந்ததும் தன்னுடைய மகன் தன்னிடம் யாருப்பா இந்த சீசனில் நல்லா கேம் விளையாடுறாங்க என்று கேட்க அதற்கு எதார்த்தமாக டக் என்று இந்த வீட்டுக்குள்ள எந்த மயிராண்டியும் கேம் ஆடல, நீதான் நல்லா விளையாடுற என்று சொல்லி பிறகு ஐயோ கெட்ட வார்த்தை பேசி விட்டேனே என்று கேமரா முன்பு மன்னிப்பும் கேட்டிருந்தார்.

அதற்கு பிறகு எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கும்போது மாயா அந்த பக்கமாக வந்து ரொம்பவே பாசமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க அதற்கு விக்ரமுடைய அம்மாவும் அப்பாவும் மாயாவிடம் ஏற்கனவே நாங்க எங்க பையனுக்கு ஒரு பெயர் வைத்திருக்கோம். ஆனால் அந்தப் பெயர் மறந்து போகிற மாதிரி நீங்க புதுசா ஒரு பேரை வச்சுக்கிட்டு இருக்கீங்க, அந்த பெயர் வெளியே எப்படி எல்லாம் போகுதுன்னு உங்களுக்கு தெரியுதா என்று கேட்கிறார்.

அதற்கு மாயா ஐயோ அங்கிள் நான் எதுவும் தப்பா பேரு வைக்கல, நான் சும்மா ஜாலிக்காகத்தான் காக்ரோச் என்று கூப்பிட்டேன் என்று சொல்ல அதற்கு சற்று எதிர்பார்க்காத வகையாக நீ இதை வார இறுதி நாளில் கமல் சார் முன்பு வேனா சொல்லு அவரு நம்புவாரு, நாங்க 24 மணி நேர எபிசோடை பார்த்துட்டு இருக்கோம் அதனால நீ சொல்றத நம்ப மாட்டோம் என்று சொல்ல, மாயாவின் முகத்தில் ஈ ஆடவில்லை.

bigg boss tamil season 7 Vikrams father has spoken some more words saying that Kamal

ஏற்கனவே கமல்ஹாசன் நிகழ்ச்சியை பார்க்காமல் ஸ்கிரிப்ட் படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டு போகிறார் என்பது பலருடைய கருத்தாக இருக்கும் நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வெளிப்படையாகவே விக்ரமுடைய அப்பா இதை கூறியிருக்கிறார். அதையும் 24 மணி நேர எபிசோடில் டெலிகாஸ்ட் செய்து இருக்கிறார்கள். இது கமலுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சியா? இல்லை தெரியாமல் இந்த உரையாடலை வெளியே விட்டு விட்டார்களா என்று தெரியவில்லை.

அதற்கு பிறகு போகும் போது விக்ரம் அப்பா தன்னுடைய மகனிடம் உன்னைப் பற்றி யாராவது தவறாக பேசினால் உடனே நீ கேள்வி கேளு, நீ எல்லா இடத்திலும் ஏத்துக்கிட்டு போனா உன்னை அவங்க வேற மாதிரி லேபிள் குத்திடுவாங்க என்றும் பேசியிருந்தார். தற்போது கமல்ஹாசனை ஒரே வார்த்தையில் கதற விட்டுவிட்டாரே விக்ரமுடைய அப்பா என்று அதிகமான ரசிகர்கள் இந்த வீடியோ கிளிப்புகளை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+