Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸுகுள்ள இதுதான் நடக்குது.. காதல் முதல் சர்ச்சை வரை மொத்த ரகசியத்தையும் உடைத்த வினுஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட வினுஷா நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறி இருந்தார்.

அதற்கு பிறகு முதல் முறையாக பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

bigg boss tamil season 7 Vinusha broke the whole secret

அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் சிலருடைய நடவடிக்கைகள் குறித்தும் தனக்கு என்ன மாதிரி எல்லாம் அங்கு பிரச்சனைகள் நடந்தது என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி உளவியல் சார்ந்தது தான். வெளியே என்னதான் அந்த நிகழ்ச்சியை பார்த்து ரிவ்யூ கொடுத்துக் கொண்டிருந்தாலும், உள்ளே அந்த நிகழ்ச்சிக்குள் போய் திணறியவர்கள் ஏராளம். அதற்கு உதாரணமாக இந்த சீசனில் கூட ஒரு சிலரை கூறலாம். அதில் யுகேந்திரனும் ஒருவர். அவர் பிக் பாஸ் ரிவிவராக இருந்தாலும் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரங்கள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்திருக்கிறது.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு சீசனையும் பார்த்து பழகிய பல சில செயலில் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவராக நடிகை வினுஷா தேவியும் கலந்து கொண்டிருந்தார். ஆனால் இவர் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் வீடு இருக்கவில்லை. அதோடு உள்ளே இருந்த போட்டியாளர்களின் சூழ்ச்சி கேலி கிண்டலால் 4 வாரங்கள் மட்டுமே இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் டபுள் எவிக்ஷனில் வெளியே வந்திருந்தார்.

இந்த நிலையில் வெளியே வந்த பிறகு இந்த நிகழ்ச்சி பற்றி பல தகவல்களை பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் நான் இதுவரைக்கும் பார்த்து புரிந்து வைத்திருந்த பிக்பாஸ் போன்று உள்ளே இல்லை. உள்ளே சிலர் டார்கெட் செய்து என்னை மட்டம் தட்டி கொண்டிருந்தனர். என்னிடம் முகத்துக்கு நேரே சிரித்து பேசிக்கொண்டு பின்னாடி என்னைப் பற்றி இளக்காரமாக பேசி சிரித்தவர்கள் பலர்.

அதில் நிக்சன், பிரதீப், ஐசு போன்றவரும் உள்ளோர். அதில் நிக்சன் என்னை பாடி சேமிங் பண்ணி இருக்கிறான். ஆரம்பத்தில் நான் அவனை என்னுடைய தம்பியாத்தான் பார்த்தேன். அவனும் அக்கா அக்கா என்று கூப்பிட்டுக்கொண்டு, நான் இல்லாத நேரத்தில் என்னை தவறாக பேசியிருக்கிறான். அக்கா கிட்ட இப்படி தப்பா யாராவது பேசுவாங்களா? அவங்களால தப்பா பார்க்க முடியுமா? அதுபோல உள்ளே ஒரு முறை அவன் என்னிடம் வந்து சம்பந்தமே இல்லாமல் சாரி கேட்டான்.

bigg boss tamil season 7 Vinusha broke the whole secret

அப்போ எனக்கு புரியல இதுக்கு தான் கேட்கிறான்னு. ஆனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நான் வீடியோ பார்த்து தான் தெரிந்து கொண்டேன். நான் இதற்கு முன்பு பார்த்த சீனன்களில் ஒரு சில இடங்களில் சண்டை சச்சரவுகள் இருக்கும். ஆனால் இப்போ இந்த சீசனில் சண்டை சச்சரவுகளை ஒரு கண்டன்டாகவே எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாயா தினமும் காலை எழுந்ததுமே நாம வாங்குற சம்பளத்துக்கு இன்னைக்கு கண்டெண்ட் கொடுத்து ஆகணும். இன்னைக்கு யாரை டார்கெட் செய்யலாம் என்று ஷெட்யூல் போட்டு கொண்டு இருப்பார். அது பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார். அவரோடு ஒரு சிலரை சேர்த்துக்கொண்டு எப்படி இவங்கள பேசலாம்? இன்னைக்கு இவங்க கூட எப்படி சண்டை போடணும் என்று பிளான் போடுவது வேலையாகவே சிலர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவங்க இந்த மாதிரி செய்றது ஒரு சில நேரங்களில் நல்லவிதமா இருந்தாலும் ஆனால் இவர்களுடைய ஸ்டேட்டர்ஜிக்காக அடுத்தவர்களை காயப்படுத்துறாங்கல்ல அது ரொம்ப தப்பு தானே? என்று அந்த பேட்டியில் வினுஷா பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+