பிக் பாஸ் 7: வீட்டிற்குள் சண்டை.. வினுஷா மீண்டும் பிக்பாஸுக்கு போகாத காரணம்? அவரே வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வினுஷா வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் வரவில்லை.

இந்த நிலையில் வினுஷா குறித்து பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நிக்சன் பேசியதை வைத்து பிரச்சனை வெடித்துக் கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் வினுஷா தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

bigg boss tamil season 7 Vinusha has published a picture of herself in the hospital

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா அறிமுகமாகி இருந்தார். ஆரம்பமான முதல் நாளிலிருந்து இவர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். முதல் நாளில் கூல் சுரேஷ் மற்றும் பிரதீப் இடம் தான் இந்த வார கேப்டனாக இருக்க வேண்டும் என்று போல்டாக வினுஷா ஆர்க்யூ பண்ணி இருந்தது பலரையும் ரசிக்க வைத்திருந்தது.

ஆனால் அதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களாக வினுஷா எங்கே போனார் என்று தேடும் வகையில் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். பெரியதாக வினுஷா வெளியே தெரியாத மாதிரி இருந்த நிலையில் அவரை உள்ளே இருந்த சிலர் புல்லி பண்ணி அவரை அழ வைத்து நான் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே போகிறேன் என்று அடிக்கடி சொல்ல வைத்திருந்தனர். அதே நேரத்தில் வினுஷாவை குறித்து நிக்சன் உருவ கேலியும் செய்திருந்தார்.

அதில், வினுஷா என்னுடைய டைப்பே கிடையாது. வினுஷாவின் முகம் சின்னதாக இருக்கிறது. எது எது எப்படி இருக்கணுமோ அது அது அப்படி இல்லை என்று பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது. அக்கா என்று சொல்லிவிட்டு இந்த மாதிரி ஆபாசமாக நிக்சன் வர்ணித்து இருக்கிறார் என்று பலரும் திட்டி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த வினுஷா நிக்சன் பேசியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பல பேட்டிகளில் தன்னுடைய கோபத்தை காட்டி இருந்தார்.

bigg boss tamil season 7 Vinusha has published a picture of herself in the hospital

அதோடு நிக்சனை தான் மன்னிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே போன அர்ச்சனா, தினேஷ் போன்றோர் நிக்சன் பேசியது குறித்து கேள்வி கேட்க அதற்கு நிக்சன் மன்னிப்பு கேட்டு இருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறார்கள் என்று பிக் பாஸில் கூறப்பட்டது.

இதனால் வைல்ட் கார்டு என்ட்ரியாக வினுஷா உள்ளே போவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் வினுஷா உள்ளே போகவில்லை. இந்த நிலையில் மீண்டும் இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வினுஷா பற்றிய பேச்சு வெடித்துக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் வினுஷா தான் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எல்லாம் சீக்கிரத்தில் மாறிவிடும் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார்.

இதனால் வினுஷாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் போகவில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே வினுஷாவின் உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தது. அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த சீசன் முடிவதற்கு முன்பு வினுஷா பிக் பாஸுக்கு போக வேண்டும் அப்போது நிக்சனின் ரியாக்ஷன் எப்படியாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+