பிக் பாஸ் 7: வாயில வச்சு அப்படி பண்ணு.. 18+ காமெடி செய்த நிக்சன், விஷ்ணு.. பூர்ணிமா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அடிக்கடி சில போட்டியாளர்கள் 18+ காமெடி செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது.. இந்த நிலையில் நேற்று நிக்சன் மற்றும் விஷ்ணு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பூர்ணிமா நான் 18+ அதனால் 18+ காமெடி பண்ணுவேன் அதுல என்ன தப்பு இருக்கிறது என்று கேள்வி கேட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று பூர்ணிமா சூப்பை சூடாக குடிக்க அவருடைய வாய் சுட்டுவிட்ட நிலையில் அதை கலாய்த்து விஷ்ணு மற்றும் நிக்சன் பேசி இருக்கின்றனர்.

Bigg Boss Tamil Season 7 Vishnu and Nixon are talking 18 comedies about Poornima

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சண்டை சச்சரவுகள் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இதனாலையே இந்த நிகழ்ச்சி குறித்து அடிக்கடி இணயத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய சீசன்கள் போல இந்த சீசன் இல்லை என்பது பலருடைய வருத்தமாக இருக்கிறது. அதிலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் சிலர் சண்டை போட்டு கண்டென்ட் கொடுத்தால் மட்டும்தான் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆக முடியும் என்று தவறாக புரிந்து கொண்டு எதற்கெடுத்தாலும் சண்டை போட்டு வருகிறார்கள்.

இது குறித்து கடந்த வாரத்தில் கமல்ஹாசன் போட்டியாளர்களை செமையாக வறுத்தெடுத்திருந்தார். எந்த டாஸ்க் கொடுத்தாலும் அங்கே என்டர்டைன்மென்டே இல்லை. நீங்கள் வன்மத்தை மட்டும் தான் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அதிகமாக திட்டி இருந்தார். இந்த நிலையில் அதைத்தொடர்ந்து இந்த வாரத்தில் கொடுக்கப்பட்ட டான்ஸ் மராத்தான் டாஸ்கில் சில போட்டியாளர்கள் தங்களுடைய பெஸ்ட்டை கொடுத்திருந்தனர்.

அதிலும் அர்ச்சனா மற்றும் தினேஷ் நடிப்பு பலருடைய பாராட்டை பெற்றது. அதுபோல பூர்ணிமா, மாயாவும் இதுவரைக்கும் இல்லாத வகையில் தங்களுடைய பெஸ்டை கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்த சீசனில் சில போட்டியாளர்கள் 18+ காமெடி செய்து கொண்டும் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதில் மாயா மற்றும் பூர்ணிமா உட்படுவர்.

ஆனாலும் அவர்கள் பிரதீப் குறித்து குற்றச்சாட்டும் போது பிரதீப் அதிகமாக இரட்டை அர்த்தமுள்ள வசனம் பேசுகிறார் என்று பேசியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் டாஸ்க் எல்லாம் முடித்த பிறகு இரவு நேரத்தில் பூர்ணிமாவிற்கு விஷ்ணு ஒரு கிண்ணத்தில் சூப் எடுத்துக் கொண்டு கொடுக்கிறார். அதை பூர்ணிமா அவசரமாக எடுத்து குடிக்க அவருடைய வாயில் சுட்டு விடுகிறது.

Bigg Boss Tamil Season 7 Vishnu and Nixon are talking 18 comedies about Poornima

உடனே விஷ்ணு தினேஷிடம் இருந்து சில ஐஸ் கட்டிகளை வாங்கிக் கொண்டு வந்து பூர்ணிமாவிடம் கொடுக்க அதை பூர்ணிமா தன்னுடைய உதட்டில் வைத்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது விஷ்ணு பக்கத்தில் இருந்து மெதுவா உதட்டில் தடவு என்று சொல்ல அதை இன்னொரு பக்கத்தில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நிக்சன் கிண்டல் செய்தபடி என்னது மெதுவா வாயை வைத்து பண்ணனுமா என்று கேட்க....

அதற்கு விஷ்ணு சீ...போடா நீ இப்படியெல்லாம் பேசாத.., நான் இந்த விளையாட்டுக்கு வரல என்று வெட்கப்பட்டு கொண்டு ஓட இவர்கள் இருவரும் பேசியதை கேட்டு சிரித்தபடியே பூர்ணிமா அந்த ஐஸ் கட்டிகளை கீழே துப்பி விட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+