Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவி செய்த அவமானம்.. சக போட்டியாளர்களின் உறவு கேலி.. ஆனாலும் வெளியே வந்ததும் வினுஷா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான வினுஷா தேவி கடந்த வாரம் எலிமினேஷனில் வெளியே வந்திருந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்கு சக போட்டியாளர்கள் அவரை டார்கெட் செய்து உருவ கேலி செய்து சிரித்து இருந்த நிலையில் அதை எல்லாம் தாண்டி மூன்று வாரங்கள் இருந்து வெளியே வந்திருக்கிறார்.

bigg boss tamil season 7 what Vinusha did when she came out

அதே நேரத்தில் விஜய் டிவியில் இவருடைய வெளியேற்றத்தை மறைமுகமாக காட்டும் பொருட்டு மிச்சர் கிண்ணத்தை வைத்து பதிவு வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து பிறகு சமூக வலைதளத்தில் எதிலுமே வினுஷா பதிவு எதுவும் வெளியிட்டு தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இது ஒரு பக்கத்தில் பாராட்டுகளையும் ஒரு பக்கத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு உளவியல் சார்ந்த நிகழ்ச்சி என்பது அனைவருக்கும் தெரியும்.

வெளியே என்னதான் நல்லவர்களாக இருந்தாலும் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் போனாலே அங்கிருக்கும் சூழ்நிலை மற்றும் பேக்ரவுண்ட் அமைப்புகளின் காரணமாகவே உளவியல் ரீதியாகவே அனைவருக்கும் கோபம் வந்துவிடும். இந்த நிலையில் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த வினுஷா தேவி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் இவர் சீரியலில் இருப்பது போன்று தைரியமாக தன்னுடைய கேரக்டரை வெளியே காட்டி இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சூழ்நிலை இவர் பெரிய அளவில் வெளியே தெரியவே இல்லை. அத்தோடு இவர் வீட்டிற்குள் இருக்கும்போது நிக்சன் ஒரு முறை உருவ கேலி செய்திருந்தார். அதாவது வினுஷாவிற்கு பெண்களுக்கு எது எது எப்படி இருக்கணுமோ அதுபோன்ற அமைப்பு இல்லை. அதனால் நான் அவர் பக்கம் திரும்ப மாட்டேன் என்கிற தோனியில் அவர் பேசியிருந்ததாக சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது.

அதோடு இவரிடம் எல்லா போட்டியாளர்களும் சரிசமமாக நடந்து கொள்ளவில்லை என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கருது தெரிவித்து வந்தனர். அதனாலேயே இவர் இந்த வீட்டிற்குள் இருக்க முடியவில்லை என்று சொல்லி பிக் பாஸிடம் தன்னை கடந்த வாரமே வீட்டுக்கு அனுப்பிடுங்க என்று வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் பிக் பாஸ் வினுஷாவின் மனதை மாற்றி மீண்டும் வீட்டிற்குள் இருக்க வைத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷனில் இவர் வெளியேறி இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் வினுஷா தேவி பொறுமையாக இருந்து வந்தார். அவரை சிலர் டார்கெட் செய்து படுத்தி எடுத்தனர். அதே பாடு தான் இப்போது புதியதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே இருக்கும் போட்டியாளர்களை படுத்துகிறார்கள்.

ஆனால் நேற்று விஜே அர்ச்சனா சகபோட்டியாளர்களால் அழுது இருந்தாலும் அவர் தன்னுடைய வார்த்தைகளை தைரியமாக எடுத்துச் சொன்னார். இதுபோல வினுஷா செய்திருக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இது பற்றி ஏதாவது இணையத்தில் தன்னுடைய கருத்தை தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் வினுஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் எந்த போஸ்ட்களும் போடவில்லை. ஏற்கனவே வினுஷா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தனக்கு சைனஸ் பிரச்சனை இருக்கிறது என்று கூறியிருந்தார். அதனால் கூட ஒரு வேலை இவர் எந்த பதிவுகளையும் போடாமல் ரெஸ்ட்டில் இருக்கிறாரா?

இல்லை பிக் பாஸுக்குள் தான் இருக்கும்போது என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதை முழுமையாக பார்த்துவிட்டு அதற்குப் பிறகு தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று பொறுமையாக இருக்கிறாரா? என்று தெரியவில்லை. இவருக்கு முன்பு நன்றாக பேசிவிட்டு முதுகிலுக்கு பின்னாடி பேசிய பல போட்டியாளர்களை தெரிந்து கொண்டு தன்னுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று பல ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+